தொழில் செய்து முன்னேறத் துடிப்பவர்களுக்கு முதலீடு வழங்கி முதலாளியாக்கும் புதிய நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சி துவக்கியுள்ளது.
சிறு தொழில் அல்லது ஏதாவது ஒரு கைத் தொழில் செய்து முன்னேறத் துடிக்கும் நபர்களைத் தேர்வு செய்து தலா 1000 ரூபாய் வழங்கப்படும்.
அதை அவர்கள் உபயோகமாகப் பயன்படுத்தி லாபமீட்டினால் அவர்களுக்கு மேலும் 10,000 வழங்கப்படும். அதிலும் முன்னேறினால் ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
இதில் யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம். கோபி தேஜா என்பவர் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.