விஜய் டி.வியில் ஒளிப்பரப்பாகும் கனா காணும் காலங்கள் தொடரில் வரும் கதாபாத்திரங்களை பார்த்து பேச நேயர்களுக்கு ஒர் அரிய வாய்ப்பை விஜய் டி.வி வழங்கியது.
இளைய பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகம் பெற்று வரும் தொடர்களில் ஒன்றான கனா காணும் காலங்கள், இத்தொடரில் வரும் கதாபாத்திரங்களை நேரில் சந்தித்து பேச ஒர் அரிய சந்தர்ப்பத்தை விஜய் டி.வி. வழங்கியது.
ஜூன் 10 ஆம் தேதி மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள ஜார்ஜ் பள்ளியில் நடிகர்களுடன் நேயர்கள் ஆடி பாடினர்.
10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.