அயர்லாந்தில் இந்திய தென்ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே நடைபெற உள்ள ஒரு நாள் போட்டித் தொடரை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை நிம்பஸ் தொலைத் தொடர்பு நிறுவனத்திடமிருந்து சன் டி.வி. பெற்றுள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளில் நிம்பஸ் நிறுவனம் ஒளிபரப்பு உரிமை பெற்றுள்ள அனைத்துப் போட்டிகளையும் தனது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பும் உரிமைக்கான ஒப்பந்தத்தை சன் தொலைக் காட்சி குழுமம் பெற்றுள்ளது.
தமிழில் சன் நியூஸ் வரிசையில் ஒளிபரப்பப்பட உள்ள கிரிக்கெட் போட்டிகள் தமிழ் வர்ணனையுடன் ஒளிபரப்பப்படும். இதே போல மற்ற தென்னக மொழிகளிலும் ஒளிபரப்பு செய்ய சன் டி.வி ஒப்பந்தம் பெற்றுள்ளது(யு.என்.ஐ)