தமிழில் உள்ள முன்னணி தொலைகாட்சிகளில் ஒன்றான ஜெயா டி.வி. விரைவில் செய்தி சேனல் ஒன்றை தொடங்க உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் தொலைக்காட்சி என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது தூர்தர்ஷன் தான். ஆனால் தற்போது செயகைக்கோள் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
அந்த வகையில் திமுக ஆதரவுடன் ராஜ் டி.வி. நிர்வாகம் கலைஞர் டி.வி. என்ற புதிய தொலைக்காட்சி ஒன்றை ஆக°ட் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதேபோல், தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான் ஜெயா டி.வி. 24 மணி நேர செய்தி சேனல் ஒன்றை தொடங்குகிறது.
இதற்கான வேளையில் ஜெயா டி.வி. நிவாகம் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் இந்த புதிய சேனல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அரசியல் தொடர்பான நேர்காணல் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும் என ஜெயா டி.வி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.