திரைப்பட நடிகைகளை தொடர்ந்து டி.வி. நடிகைகளும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அதிக அளவில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.
வெளி நாடுகள் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்துவது தமிழ் திரை உலகில் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதற்கு திரையுலகை சேர்ந்த சிலர் முன்னுரிமை கொடுத்து வருகின்றனர்.
கலை நிகழ்ச்சிகளில் திரைப்படத் துறையினரே அதிக அளவில் பங்கேற்பர். ஆனால் சமீபகாலமாக சின்ன திரையை சேர்ந்த நடிகைகள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர்.