புதிதாக தொடங்கப்பட உள்ள கலைஞர் டி.வி. யில் ரஜினி நடித்து வெளிவர உள்ள சிவாஜி படத்தின் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏவிஎம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலக முழுவதும் ஒரே சமயத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிவாஜி படத்தை ஒளிபரப்பும் உரிமையை கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக புதுப்படங்களை டி.வி.யில் ஒளிபரப்புவதில் சன் டி.வி. முதலிடம் வகித்து வருகிறது. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள சிவாஜி படத்தை கலைஞர் டி.வி. யில் ஒளிபரப்பபடுவது கலைஞர் டி.வி. மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
கலைஞர் டி.வி.யின் தொடங்க நாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதி சிவாஜி படம் கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.