Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிண்டி தேசிய பூங்கா

Advertiesment
கிண்டி தேசிய பூங்கா

Webdunia

, சனி, 30 ஜூன் 2007 (15:17 IST)
குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று ஒரு நாள் பொழுதைக் கழிக்க ஏற்ற இடம் கிண்டி தேசிய பூங்கா.

சென்னையை அடுத்துள்ள கிண்டியில் உள்ள தேசிய பூங்கா விலங்குகள், பறவைகள், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் என நம்மை மற்றோர் உலகிற்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.

இங்கு பல்வேறு விதமான மரங்களும், இதுவரை பார்த்திராத பறவை இனங்களும், அரிதான விலங்கினங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

விலங்குகள் பலவும் இங்கு தனித்தனியாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளை அழைத்துச் சென்று காண இது ஏற்ற இடம் என்பதில் சந்தேகமில்லை.

விமானம் வழியாக சென்னை விமான நிலையம் வந்து கிண்டி தேசிய பூங்காவை அடையலாம்.

ரயில் மார்கமாக வந்தால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தோ அல்லது கிண்டி ரயில் நிலையம் வந்து இங்கு வரலாம்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிண்டிக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

கிண்டி வந்தால் அங்கு பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவற்றையும் கண்டு களிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil