கேரள மாநிலம் தேக்கடியில் மலர் கண்காட்சி நேற்று துவங்கி நடைபெறுகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அடங்கிய தேக்கடியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
வண்ண வண்ண மலர்களும், வாசனை மிகுந்த மலர்களும், மனதை கவரும் அழகான மலர்களும் ஒரு சேர ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து மலர் கண்காட்சியைப் பார்த்து செல்கின்றனர்.
ஒரு வார காலம் இந்த மலர் கண்காட்சி நடைபெறும்.