தமிழ்நாட்டில் ஏலகிரி, கொல்லிமலை உள்பட 18 சுற்றுலா தலங்கள் பிரபலம் ஆகாமல் இருக்கின்றன. இவற்றை உலகளவில் பிரபலம் அடையச் செய்வதற்காக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் இருக்கும் பல்வேறு இடங்கள் சிறப்புகளைப் பெற்றும் பொதுமக்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறாமல் உள்ளன.
அதற்குக் காரணமாக போக்குவரத்து வசதி, தங்கும் வசதி போன்றவை இல்லாமல் இருப்பதுதான். அதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்து 18 சுற்றுலாத் தலங்களை சிறப்படைய திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக ஏலகிரி, கொல்லிமலை, தாரமங்கலம், ஏற்காடு, திற்பரப்பு, திருக்கடையூர், தரங்கம்பாடி, பழவேற்காடு ஏரி, குற்றாலம், திருச்செந்தூர் ஆகிய சுற்றுலா தலங்களில் மத்திய, மாநில அரசு நிதியுடன் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன.