Entertainment Tourism Tourismspots 0712 04 1071204058_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை ஆ‌ட்டோ‌க்க‌ளி‌ல் சு‌ற்றுலா வரை‌ப்பட‌ங்க‌ள்: த‌‌‌மிழக சு‌‌‌‌‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி கழக‌‌ம் முடிவு!

Advertiesment
சுற்றுலா நட்பு ஆட்டோ’ திட்டத்தை த‌மிழக சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌‌சி கழகம்

Webdunia

, வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:14 IST)
‘சுற்றுலா நட்பு ஆட்டோ’ எனும் புதியதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள த‌மிழக சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌‌சி கழகம், செ‌ன்னை ஆ‌ட்டோ‌க்க‌ளி‌ல் த‌மிழக‌த்த‌ி‌ல் உ‌ள்ள மு‌க்‌கிய சு‌ற்றுலா தள‌ங்க‌ளி‌‌ன் வரைபட‌‌ங்‌க‌ள் வரைந்து சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டத் திட்டமிட்டுள்ளது!

முத‌ல் க‌ட்டமாக 50 ஆ‌ட்டோ‌க்க‌ளி‌‌ல் இ‌த்‌தி‌ட்ட‌ம் செ‌ய‌ல்படு‌த்த‌ப்படு‌கிறது எ‌ன்று த‌மிழக சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி கழக‌ இய‌க்குன‌ர் எ‌ம்.ராஜாரா‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌த்‌தி‌ட்ட‌ம் முத‌‌லி‌ல் செ‌ன்னை செ‌ன்‌ட்ர‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் தொட‌‌ங்க‌ப்படு‌கிறது எ‌ன்று‌ம், சொ‌ந்த ஆ‌ட்டோ‌க்க‌ள் வை‌த்‌திரு‌‌ப்பவ‌ர்களு‌க்கு மு‌ன்னு‌ரிமை வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் த‌மிழக சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி கழக இய‌க்குன‌ரராஜாரா‌ம் கூ‌றினா‌ர். மேலு‌ம் ஆ‌ட்டோ ஓ‌ட்டுன‌ர்க‌ளிட‌‌ம் த‌‌‌மி‌‌ழ்நாடு, செ‌ன்னை மாநகர வரைபட‌ங்க‌ள் கொ‌ண்ட கையேடு வழ‌ங்க‌‌ப்படு‌ம். பயண‌த்‌தி‌ன் போது அவ‌‌ர்களு‌க்கு இ‌ந்த கையேடு வச‌தியாக இரு‌க்கு‌ம்.

தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படு‌ம் ஆ‌ட்டோ ஓ‌ட்டுன‌ர்க‌ளி‌ன் முக‌வ‌ரி, தொலைபே‌சி ‌எ‌ண்க‌ள் செ‌ன்னை எழு‌ம்பூ‌‌ர், செ‌ன்‌ட்டி‌ல் உ‌ள்ள சு‌‌ற்றுலா அலுவலக‌ங்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம். ‌ஆ‌ட்டோ ஓ‌‌ட்டுன‌ர்களு‌க்கு இலவசமாக மரு‌த்துவ கா‌ப்ப‌ீடு வச‌தியை ஆன‌ந்த ‌விகட‌ன் வார இத‌ழ் செ‌ய்து‌ள்ளது. அதும‌ட்டு‌‌‌மி‌ன்‌றி அவ‌ர்களு‌க்கு ‌இர‌ண்டு ஜோடி சீருடைகளு‌ம் வழ‌ங்கு‌கிறது. அ‌ந்த ‌சீருடை‌யி‌ல் இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்காகவே த‌னியாக வடிவமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள த‌மிழக சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி கழக‌த்‌‌தி‌ன் ‌சி‌ன்ன‌ம் பொ‌றி‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம்.

அடு‌த்த‌க் க‌ட்டமாக இ‌ந்த ‌தி‌ட்ட‌ம் மு‌க்‌கிய பேரு‌ந்து ‌நிலைய‌ம், ர‌யி‌ல் ‌நிலைய‌ம் ம‌ற்று‌‌ம் மு‌க்‌கிய நகர‌ங்க‌ளி‌ல் ‌வி‌ரிவு‌ப்படு‌த்த‌ப்படு‌‌கிறது எ‌ன்று த‌மிழக சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி கழக இய‌க்குன‌ர் ராஜாரா‌ம் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil