சென்னை வணிக நிறுவனங்களும், அடுக்கு மாடிக் கட்டடங்கள் மட்டும் நிறைந்த நகரமல்ல. காணக் காண அதிக இடங்கள் உள்ளன.
சென்னைக்கு மெருகு சேர்க்கும் முக்கிய இடம் மெரினா பீச். சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் சென்று பார்க்கும் இடம் மெரீனாதான். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்கரையான சென்னை மெரீனா பீச் அருகே எம்.ஜி.ஆர்., அண்ணா என பெரிய தலைவர்களின் நினைவிடங்கள் அமைதிருப்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.
சென்னை மெரீனாவை ஒட்டி அண்ணா சதுக்கம் பேருந்து நிறுத்தம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக வசதியாகும்.
எப்பகுதியில் இருந்தும் சென்னை மெரீனாவிற்கு வர பேருந்து வசதி உண்டு.