Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிப்.4ஆம் தேதி தனி சுற்றுலா ரயில்

பிப்.4ஆம் தேதி தனி சுற்றுலா ரயில்
, புதன், 21 ஜனவரி 2009 (12:17 IST)
ஷிர்டி பாபா, பண்டரிபுரம், மந்த்ராலயம் கோயில்களுக்குச் சென்று வர தனி சுற்றுலா ரயில் பிப்ரவரி 4ஆம் தேதி இயக்கப்படுகிறது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக (ஐஆர்சிடிசி) துணை பொது மேலாளர் எல். ரவிக்குமார் இது குறித்து கூறுகையில், ஐஆர்சிடிசி சார்பில் பாரத தரிசனம் என தனி சுற்றுலா ரயிலை இயக்க உள்ளது.

இந்த சுற்றுலா ரயில் மூலம் அனைத்து தரப்பு மக்களும் இந்தியாவில் உள்ள முக்கயி இடங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி சுற்றுலா ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டு திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக ஆந்திரா, மகாராஷ்டிரா செல்கிறது.

ஷிர்டி பாபா தரிசனம் மற்றும் பண்டரிபுரம், மந்த்ராலயம் கோயில்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு தனி நபருக்கு ரு.4125 கட்டணமாக வசூலிக்கப்படும். ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, கோயில்களை சுற்றிப் பார்க்க பேருந்து வசதி ஆகியவை இந்த கட்டணத்தில் அடங்கும்.

ரயிலில் பாரத தரிசன சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்ய 044-6459 4959, 2533 0341, 90031 40681 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil