Publish Date: Sat, 08 Mar 2008 (10:17 IST)
Updated Date: Sat, 08 Mar 2008 (10:03 IST)
உலக மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் இன்று, பெண்களுக்கான சிறப்பு சலுகையை தமிழக சுற்றுலாக் கழகம் அறிவித்துள்ளது.
அதாவது சுற்றுலா செல்வதில், விடுதியில் பதிவு செய்யும் பெண்களுக்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 10 விழுக்காடு தள்ளுபடி வழங்குகிறது
இது குறித்து தமிழக சுற்றுலாக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
உலக மகளிர் தினமான இன்று, சுற்றுலாவிலும் (திருப்பதி சுற்றுலா), தங்கும் விடுதியிலும் பதிவு செய்யும் பெண்களுக்கு தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பத்து சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.
இப்படி பதிவு செய்யும் சுற்றுலா மற்றும் தங்கும் விடுதிகளுக்கு, வரும் மாதங்களில் எப்போது சென்றாலும், இப்பதிவு செல்லும். மேலும், இன்று சென்னை தீவுத் திடலில் நடக்கும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சிக்கு வரும் அனைத்து பெண்களும் இலவசமாக அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.