Publish Date: Mon, 29 Dec 2008 (11:04 IST)
Updated Date: Mon, 29 Dec 2008 (11:03 IST)
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைவின்றி கொட்டுகிறது.
இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமானதாலும், தற்போது பள்ளி விடுமுறைக் காலமானதாலும் குற்றாலத்திற்கு தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
அதிகமாக இல்லாமலும், சோர்ந்து வடியாமலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மிகவும் ஏற்ற வகையில் குற்றால அருவியில் நீர் வரத்து இருப்பது அங்கு வரும் மக்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.