சபரிமலை ஐயப்பன் கோயில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக செவ்வாய்க்கிழமை நடை திறக்கப்படுகிறது.
சபரிமலையில் இன்று மாலை 5.30 மணிக்கு மேல் சாந்தி விஷ்ணு நம்பூதிரி நடையைத் திறந்து வைக்கிறார். இதையடுத்து ஐயப்பனுக்கு குத்து விளக்கு தீபாராதனை நடைபெறும். நவம்பர் 16ஆம் தேதி எந்த சிறப்பு பூஜையும் கிடையாது.
மேல் சாந்திகள் பதவியேற்பு சடங்கு தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெறுகிறது. இதையடுத்து, புத்ன்கிழமை மேல்சாந்தி சசி நம்பூதிரி பூஜைகளை நடத்துகிறார். ஐயப்பனுக்கு ஒவ்வொரு நாளும் நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு இதுவரை 23 லட்சம் அரவணை டின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பம்பை, நீலிமலை, எரிமேலி, மாளிகைபுரம் அம்மன் கோயில் செல்லும் பாதையில் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது,
அதேப்போல மலைக்கு வரும் வழியில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு, குடிநீர் வசதி கிடைக்க திருவாங்கூர் தேவசம் கழகம் நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று அதிகாரிகளை தெரிவித்தனர்.