Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது

Advertiesment
வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது
, வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:04 IST)
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. ஐனவரி 7ஆம் தேதி சொ‌ர்‌க்கவாச‌‌ல் ‌திற‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சி நடைபெறு‌ம்.

108 வைணவ தலங்களில் முதன்¨யானது திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆகும்.

இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். நேற்று இரவு 7 மணிக்கு ரங்கநாதர் மூலஸ்தனத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் விழா துவங்கியது.

பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என்ற 21 நாட்கள் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஞாயிற்றுக்கிழமை முதல் நம்பெருமாளுக்கு பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது.

வரும் 7ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அன்று இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil