'மலைகளின் ராணி' என்று அழைக்கப்படும் கோடை வாழிடமான உதகமண்டலம் என்ற ஊட்டியை 'இந்தியாவிலேயே நம்பர் 1' மலை வாழிடமாக 'அவுட்லுக்' மாத இதழ் பத்திரிக்கை குழுமத்தைச்சேர்ந்த 'அவுட்லுக் டிராவலர்' இதழ் தேர்ந்தெடுத்துள்ளது.
இது பற்றி 'அவுட்லுக்' நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த வருடம் நவம்பர், டிசம்பர்-07 வெளியான இதழில் இது பற்றிய ஒரு கேள்வி வெளியிடப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டதாகவும், இணையதளத்திலும் இதற்கான அறிவிப்பை செய்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் 'ஊட்டி' என்ற உதகமண்டலம் 17.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதல் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த கோடை வாழிடமான கொடைக்கானல் 7.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 7வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த வெற்றிக்கான கோப்பை தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை வசம் ஒப்படைக்கப்படும் என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.