ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் விஜய் நடித்திருக்கும் படம் வில்லு. போக்கிரி வெற்றியை தந்த விஜய், பிரபுதேவா கூட்டணியின் படம் என்பதால் விநியோகஸ்தர்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்பு.
அழகிய தமிழ் மகனுக்குப் பிறகு விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் என்கின்றன தகவல்கள். படத்தின் கலர்ஃபுல் அட்ராக்சன் நயன்தாரா. விஜய்யுடன் வில்லுவில் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்.