சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி திரையரங்கு வளாகத்தில் மேலும் ஒரு புதிய திரையரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கில் படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வசதியுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி மெகாமால் திரையரங்கு வளாகத்தில் "ஸ்வர்ணசக்தி அபிராமி' என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய திரையரங்கை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திரையரங்கு பராமரிப்பு, மேம்பாட்டில் பல புதிய முயற்சிகளை அபிராமி மெகாமால் மேற்கொண்டு வருகிறது. அதன் உரிமையாளர் அபிராமி ராமநாதன் உலகத்தரம் மிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக "ஸ்வர்ணசக்தி அபிராமி' என்ற புதிய திரையரங்கை உருவாக்கி உள்ளது. படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வசதி இதில் உள்ளது. மேலும், உணவுகளை ஆர்டர் செய்து படம் பார்த்துக் கொண்டே சாப்பிடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறப்பான ஒலி, ஒளி அமைப்புகளுடன் இந்த திரையரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.