Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொக்கிஷம்

Advertiesment
பொக்கிஷம்
, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (15:45 IST)
உணர்ச்சிகளை அழுத்தமாக கொடுப்பவர் சேரன். ரசிக்கிற மாதி‌ி இருக்கும் அந்த அழுத்தம் பொக்கிஷத்தில் வலிக்கிமாதி‌ி இருப்பது நெருடல்.

WD
கொல்கத்தாவில் மரைன் இன்‌ஜினியராக பணிபு‌ரிகிறவர் சேரன். நோயாளியான அப்பாவைப் பார்க்க சென்னை வருகிறார். வந்த இடத்தில் மருத்துவமனையில் பக்கத்து கட்டிலில் அம்மாவுக்கு துணையாக இருக்கும் பத்மப்‌ரியாவை சந்திக்கிறார்.

மருத்துவமனையில் இருக்கும் சில நாட்களில் பத்மப்‌ரியாவின் இலக்கிய ஆர்வமும், புத்திசாலித்தனமும் சேரனுக்கும், சேரனின் நல்ல மனசு பத்மப்‌ரியாவுக்கும் பிடித்துப் போக அவரவர் ஊருக்கு திரும்பிய பிறகும் கடிதம் மூலமாக வளர்கிறது நட்பு. நாளடைவில் இந்த கடித நட்பு காதலாக மாற்றமடைய, காதலர்களைப் போலவே நமக்கும் பதற்றம்.

இந்துவான சேரனும் முஸ்லிமான பத்மப்‌ரியாவும் ஒன்றிணைய இந்த சமூகம் அனுமதிக்குமா? அதுவும் சாதியும், மதமும் தலைதூக்கியிருந்த எழுபதுகளில்?

ஆச்ச‌ரியமாக, பெண் கேட்டுவரும் சேரனையும், அவரது அப்பா விஜயகுமாரையும் உட்கார வைத்து சோறு போடுகிறது பத்மப்‌ரியாவின் குடும்பம். மதத்தைவிட மனுஷனை நேசிக்கிறவன் நான் என்று இருவ‌ரின் திருமணத்துக்கு சம்மதிக்கிறார் பத்மப்‌ரியாவின் அப்பா.

ஆனால், மூன்றே மாதத்தில் பத்மப்‌ரியாவிடமிருந்து வரும் கடிதம் நின்று போகிறது. சின்ன தடயம்கூட இல்லாமல் அந்த குடும்பமே காணாமல்போக, சாத்தியமுள்ள எல்லா இடங்களிலும் சேரன் தேடுகிறார்... தேடுகிறார்... தனது இறுதி மூச்சுவரை தேடுகிறார். தனது காணாமல் போன காதலிக்கு அவர் எழுதிய முகவ‌ி இல்லாத கடிதங்கள் உ‌ரியவரை சென்றடைந்ததா என்பது கிளைமாக்ஸ்.

சேரனின் மகன் அவரது காதல் கடிதங்களை படிப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. கடிதங்கள் வாயிலாக கதை சொல்வது சுவாரஸியமாக இருந்தாலும், சேரன், பத்மப்‌ரியா குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும்போது, ச‌ி, போதும் நிறுத்துங்கப்பா என்று சொல்லத் தோன்றுகிறது.

மிடில் கிளாஸ் இளைஞனாக சேரன் கச்சிதம். சி‌ரிக்கும்போதும், சோகமாக இருக்கும்போதும் தாடையை சுருக்கி அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் சொல்ல மறந்த கதை தொடங்கி மாயக்கண்ணாடி வரையான சேரன்களை நினைவுப்படுத்துகிறது.

முக்காடு போட்ட அரைவாசி முகத்திலேயே அத்தனை உணர்வுகளையும் கொண்டு வருகிறார் பத்மப்‌ரியா. போனில் சேரனின் குரலை கேட்டதும், பேச முடியாமல், உங்களை பார்க்கணும்போல இருக்கு என்கிறாரே, சபாஷ் போட வைக்கும் நடிப்பு. நதீரா என்ற நாகூர் முஸ்லிம் பெண்ணாகவே மாறியிருக்கிறார்.

webdunia
WD
பத்மப்‌ரியாவின் அப்பா அவரை வீட்டிற்குள் சிறை வைத்தாலும், சேரனுடன் தொடர்பு கொள்ள அவர் ஏன் முயற்சிக்கவில்லை? அவருக்கு திருமணமாயிற்றா? இந்த கேள்விகளுக்கு அவர் இறுதி காட்சியில் விளக்கம் தரும்போது, பாதி திரையரங்கு காலியாகி விடுகிறது. கிளைமாக்ஸில் கத்தி‌ி போடாததால் வந்த குழப்பம்.

சின்ன வேடம் என்றாலும் அசத்தியிருக்கிறார்கள் விஜயகுமாரும், சேரனின் நண்பராக வரும் இளவரசுவும். இருவரும் கம்யூனிஸ்டாக வருவதாலா தெ‌ரியவில்லை, இருவர் நடிப்பும் படு யதார்த்தம்.

படத்தின் இரண்டு ஹீரோக்கள் கலை இயக்குனர் வைரபாலனும், ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவும். எழுபதுகளின் கொல்கத்தாவை இருவரும் சேர்ந்து கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். நிலா.. நீ வானம், காற்று, மழை பாடலின் விஷுவல, பார்க்கப் பார்க்கப் பரவசம். சபேஷ் முரளி இசையில் இந்தப் பாடல்தான் டாப்.

சேரன் கம்யூனிஸ்ட், பத்மப்‌ரியா இலக்கிய ஆர்வம் உள்ளவர். இந்த அடையாளங்கள் கதாபாத்திரத்தின் தன்மையில் எந்த தனித்தன்மையையும் பிரதிபலிக்கவில்லை. துர்காவை வணங்கியதும் சேரனுக்கு பத்மப்‌ரியாவிடமிருந்து கடிதம் வருகிறது. அடுத்த கணமே கம்யூனிஸ்ட் ஆன்மிகவாதியாகிறான். எதற்கு இந்த திணிப்பு? சேரனை போலவே எல்லா கதாபாத்திரங்களும் சோகம் வந்தால் கண்ணை மூடி வானத்தைப் பார்க்கிறார்கள்.

சேரனுக்கும், பத்மப்‌ரியாவுக்குமான நட்பு துளிர்விடும் ஆரம்பக் காட்சிகள் ரம்யமானவை. தமிழ் சினிமாவின் குத்துப் பாட்டு, ஆ‌க்சன் காட்சி, திடீர் திருப்பம் எதுவுமில்லாமல் நேர்மையான ஒரு படத்தை தர சேரன் முயன்றிருக்கிறார். அதில் அவர் முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறாரா என்பது இரண்டாம்பட்சம்... அந்த நேர்மை, அதுதான் இந்தப் படத்தின் பொக்கிஷம்.

Share this Story:

Follow Webdunia tamil