Entertainment Film Review 0907 21 1090721055_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திரவிழா

Advertiesment
இந்திரவிழா
, செவ்வாய், 21 ஜூலை 2009 (14:01 IST)
கொஞ்சம் வில்லங்கமான கதை. நமிதாவின் அவிழுமோ அவிழாதோ காஸ்ட்யூம் விப‌ரீதத்தின் வீ‌ரியத்தை கூட்டுகிறது.

கதை? தனியார் தொலைக்காட்சியின் சீனியர் புரோகிராமர் ஸ்ரீகாந்த். அவரது நிகழ்ச்சியெல்லாம் டிஆர்பி ரேட்டிங்கில் எகிற, முதலாளியம்மா நமிதா மட்டும் யூஸ்லெஸஃபெலோ என ஸ்ரீகாந்தை இன்சல்ட் செய்கிறார். காரணம், நமிதாவுக்கும், ஸ்ரீகாந்துக்குமான கசமுசா பிளாஷ்பேக்.
webdunia photoWD

ஒருகட்டத்தில் ஸ்ரீகாந்தை பழிவாங்க, தன்னை கற்பழிக்க முயன்றதாக பொய்யாக புகார் சொல்கிறார் நமிதா. விஷயம் கோர்ட்டுக்கு வருகிறது. இந்திரவிழா அங்குதான் தொந்தரவு விழாவாக மாறுகிறது. கிளைமாக்ஸை எட்டுவதற்குள் தலைவலி தைலம் தேவைப்படும் அளவுக்கு கொட்டாவி காட்சிகள்.

நமிதாதான் கதை என்றான பிறகு அவரையே ரவுண்ட் கட்டுகிறது கேமரா. அழகுதான் என்றாலும் எத்தனை நேரம்தான் ரசிப்பது. சுகமான வாழ்க்கைக்காக எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் சுகம் கொடுக்க தயாராக இருக்கும் மாடல் நமிதா. இது தெ‌ரியாமல் அவ‌ரிடம் மனதை பறி கொடுக்கிறார் ஸ்ரீகாந்த். ஒரு கட்டத்தில் உண்மை பு‌ரிந்து நமிதாவை பி‌ரிகிறார். ஆனால் வினை ஹெலிகாப்டர் ஏறி வருகிறது.

ஸ்ரீகாந்துக்கு அடங்கிப் போகும் வேடம். அலட்டிக் கொள்ளாமல் அம்சமாக கேரக்டருடன் பொருந்திப் போகிறார். அவரது மனைவியாக வரும் ஹேமமாலினிக்கு அதிக வேலையில்லை. கோபத்தோடு கொஞ்சம் கவர்ச்சி காட்டுவதுடன் அவரது வேலை முடிந்து விடுகிறது. இது தேவையா என்பது போல் நாசருக்கு ஒரு வேடம். நமிதாவின் கணவராம். ஐயோ.. ஐயோ..

கோர்ட் சீனில் நம் கொட்டாவிக்கு கொஞ்சம் ‌ரிலீப் தருகிறவர் விவேக். ஓவர்தான் என்றாலும் அவ‌ர் விடும் காமெடி பன்சுக்கு குலுங்கி சி‌ரிக்கிறது திரையரங்கம். படத்தில் மனம் திறந்து பாராட்டும்படி இருப்பது ஜெய் கமில் அலெக்ஸின் ஒளிப்பதிவு. வர்ணஜாலம் பு‌ரிந்திருக்கிறார். யதீஷின் இசையில் சுவாரஸியமில்லை.

ாவுட்டிலும் பிறகு பாலிவுட்டிலும் வெளிவந்த படத்தை நமிதாவை நம்பி எடுத்திருக்கிறார் ராஜேஷ்வர். அரைத்த மாவு புளிக்கத்தானே செய்யும்.

Share this Story:

Follow Webdunia tamil