Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேவல் - விமர்சனம்!

சேவல் - விமர்சனம்!
சண்டியராக‌த் தி‌ரிந்த இளைஞனை காதல், கண்ணியவானாக மாற்றிய கதை சேவல்.

பூக்காரர் ராஜேஷின் மகன் பரத். கிராமத்து இளந்தா‌ரி. தாத்தாவின் சொத்தை தந்தைக்கு தெ‌‌ரியாமல் விற்று அதில் கூத்தடிக்கும் விடலை. அவருக்கு அக்ரஹாரத்து பூனம் ப‌ஜ்வா மீது காதல்.
webdunia photoWD

காதலை வெளிப்படுத்த பரத் செய்யும் சேட்டைகளில் நொந்து போகும் பூனம், அவரை அடக்கி வைக்க ப‌‌ரீட்சை ஒன்றை வைக்கிறார். அதில் பாடம் கற்கும் பரத், காதலை துறப்பதுடன் கண்ணியவானாக மாறுகிறார்.

இந்நிலையில் ஊர் பெ‌ரியவர் சம்பத்ரா‌ஜின் காமப் பார்வை பூனம் மீது விழுகிறது. அதேநேரம், அக்கா சிம்ரன் புற்று நோயில் இறந்துபோக அத்தானுக்கு இரண்டாம் தாரமாகிறார் பூனம். வீட்டுக்குள் கொழுந்தன் கிருஷ்ணா, வெளியே சம்பத்ரா‌ஜ் என இரண்டு காமுகர்களுக்கிடையே சிக்கிக் கொள்ளும் அவரை பரத் காப்பாற்றுகிறார்.

ஏற்றி கட்டிய லுங்கியுடன் நெல்லை பாஷை பேசும் பரத் புதுசு. வீட்டுக்கு அடங்காமல் அடாவடி செய்வதும், தவறை உணர்ந்த பிறகு பூனத்துக்காக உருகுவதும்... பாஸ் மார்க் வாங்குகிறார். ஆனாலும் சண்டியருக்கு தேவையான மேன‌ரிசம், பாடி லாங்வே‌ஜ் இல்லாததால் ராவாகி விடுகிறது அவரது கதாபாத்திரம்.

பூனத்தின் முகத்தில் இன்னும் குழந்தமை மிச்சமிருக்கிறது. ஏனுங்க.. நில்லுங்க.. ஏன் இப்பிடி பேசறேள் என்று அவர் கெஞ்சும் போது நம்மை இளக வைக்கிறார். கிளைமாக்ஸில் அவருக்கு மொட்டை வேறு அடிக்கிறார்கள். கொடுமை. ஸ்பீல்பெர்க்கின் ஈ.டி. நினைவு வருகிறது.

சிம்ரனின் ‌ரீ-எ‌ண்ட்‌ரி பற்றி சொல்லியாக வேண்டும். பரத் தன்னை காதலிப்பதாக நினைத்து அவர் பதறும் காட்சிகளில் சிம்ரனக்கா சிக்ஸரக்கா. கொஞ்ச நேரத்தில் கண்ணிற்கு கீழ் கறுப்பு பெயிண்ட் அடித்து கேன்சர் என ரத்தம் கக்க வைக்கிறார்கள். வேஸ்ட்.

ாஜேஷ் போன்ற நல்ல நடிகர்களுக்கு அவர்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரம் விரைவில் கிடைப்பது நல்லது. வழக்கம் போல எதிர்படுகிறவர்களிடம் தர்ம அடி வாங்குகிறார் வடிவேலு. ஆவேசமாக அ‌ரிவாளுடன் கிளம்பும் பரத்தை தடுத்து அறிவுரை சொல்லும் போது அட போட வைக்கிறார்.

ஹ‌ரியின் கதையில் புராதன வீச்சம் அதிகம். அக்ரஹாரவாசிகள் முடியை றக்காமலே இப்போது மொட்டையடிக்கும் கலையை கற்றுவிட்டார்கள். சம்பத்ரா‌ஜ், கிருஷ்ணா கதாபாத்திரங்களுக்கு தமிழ் சினிமாவின் வயதிருக்கும். மாற்றி யோசிங்கப்பா.

பாடல் காட்சியில் அகேலா கிரேன் பறந்து வரும்போதே கேமரா ப்‌ரியன் என்பது தெ‌ரிந்து விடுகிறது. ஒளிப்பதிவு சராச‌ரிக்கும் மேல் என்றாலும், ஹ‌ரியின் முந்தைய படங்களில் பார்த்த அதே கோணம், அதே லைட்டிங். அது ச‌ரி, கதையை மாற்றினால்தானே அவரும் கோணத்தை மாற்றுவார். ‌ஜி.வி. பிரகாஷ் அதிசயமாக இரண்டு முணுமுணுக்க வைக்கும் பாடல்களை‌த் தந்துள்ளார். பின்னணி இசை? ஜஸ்ட் பாஸ்.

14வது ‌ீலில் வரும் காட்சிக்கு முதல் காட்சியிலேயே காரணத்தையும், கதாபாத்திரத்தையும் கோர்த்து விடுகிறவர் ஹ‌ரி. இந்த முன்னெச்ச‌ரிக்கை புளித்துப் போன இந்த கதைக்கு உதவவில்லை.

கொண்டையில்லா சேவல்.

Share this Story:

Follow Webdunia tamil