Entertainment Film Review 0810 04 1081004037_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலில் விழுந்தேன் - ‌விம‌ர்சன‌ம்!

Advertiesment
காதலில் விழுந்தேன் விமர்சனம் நகுலன் சுனேனா விஜய் ஆண்டனி நாக்க முக்க
கொஞ்சம் குணா, கொஞ்சம் காதல் கொண்டேன். இரண்டையும் கூட்டிப் பிசைந்தால் அதுதான் காதலில் விழுந்தேன்.

ஒரு விபத்தின் மூலம் பட்டினப்பாக்கம் நகுலுக்கும், கோடீஸ்வர வா‌ரிசான சுனேனாவுக்கும் காதல் பிறக்கிறது. திடீரென்று ஒருநாள் சுனேனா இறந்து விடுகிறார்.
webdunia photoWD

அவர் மீது அதீத காதல் கொண்ட நகுலன் சுனேனா இறந்ததை நம்ப மறுக்கிறார். அவரது பிணத்தை ூக்கிக் கொண்டு ஓடுகிறார். அவரை போலீஸ் துரத்துகிறது. இறுதியில் நகுல் என்ன ஆனார் என்பதை சஸ்பென்ஸ் சேர்த்து சொல்லியிருக்கிறார்.

பாய்ஸில் பீப்பாய் மாதி‌ரி இருந்த நகுல் டீக்காக வருவது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. சுனேனாவை அவர் காட்டுத் தனமாக காதலிப்பதும், அவரது பிணத்தை சுமந்து கொண்டு ஓடுவதும் திரைக்கதையை ூடு வைத்த ஆட்டோ மீட்டராக்குகிறது. பாடல் காட்சியிலும், சண்டை காட்சியிலும் இளம் நடிகர்களுக்கு சவால் விடுகிறார்.

இயல்பான நடிப்பில் சுனேனா. அம்மாவை நினைத்து உருகும் போது ப‌ரிதாபப்பட வைக்கிறார். போலீஸ் அதிகா‌ரியாக சம்பத். நகுலனை அவர் வெறி கொண்டு துரத்துவது ரசிக்க வைக்கிறது. டிக்கெட் ப‌ரிசோதகராக வரும் லிவிங்ஸ்டன் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

விஜய் ஆண்டனியின் நாக்க முக்க பாடல்தான் படத்தின் முகவ‌ரி. பாடல் வரும் இரண்டு முறையும் எழுந்து ஆடுகிறார்கள். தோழியா காதலியா பாடலும், உன் தலைமுடி பாடலும் விஜய் ஆண்டனியின் மெலடி திறமைக்கு சான்றுகள். ஊட்டியின் அழகை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.

நம்ப முடியாத கதை, நம்ப முடியாத காட்சிகள். அதனை ரசிக்கும்படி செய்திருப்பது ஒன்றே படத்தை காப்பாற்றுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil