Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொய் சொல்ல போறோம்!

பொய் சொல்ல போறோம்!
, புதன், 24 செப்டம்பர் 2008 (14:42 IST)
கிரவுண்ட் மேட்டரை வைத்து நகைச்சுவையில் ரவுண்ட் கட்டியிருக்கிறார் இயக்குனர் விஜய்.

சம்பாதித்த பணத்தையெல்லாம் கொட்டி தனது கனவு இல்லத்தை கட்ட பிளாட் வா‌ங்குகிறார் ‌ரி‌ட்டையர்ட் கிளார்க் நெடுமுடி வேணு. அந்த ‌ப்ளாட்டை ஆக்ரமிக்கிறார் நில மோசடி தாதா நாசர்.

போலீஸ், பொலிடிசியன் என்று எ‌ங்கு‌ம் நீதி கிடைக்காமல் ஒரு கட்டத்தில் நிலம் போனால் போகிறது என்று விரக்தியில் முடிவெடுக்கிறார் நெடுமுடி வேணு.

அப்பாவின் கனவை நிறைவேற்ற தனது கேர்ள் ப்ரெண்டுடன் களம் இற குகிறார் நெடுமுடி வேணுவின் மூத்த மகன் கார்த்திக். பாஸ்‌கியின ப்ராடு திட்ட‌ங்களும், அதற்கு கார்த்திக் அண்டு கோ வடிவம் கொடுக்கும் விதமும் தாதா நாசர் அதில் ஸ்வாஹஆகும் விதமும்... ஆஹா.
webdunia photoWD

மகன்களை நண்பர்களாக நடத்துவதற்காக மகன்களுக்கே மது ஊற்றிக் கொடுப்பது, நிலம் கைவிட்டு போன விரக்தியில் கண்ணீர்விட்டு குமுறுவது என நடிப்பில் தானொரு சீனியர் சிட்டிசன் என்பதை நிரூபித்திருக்கிறா‌ர் நெடுமுடி வேணு.

நாசரை ஏமாற்ற துபாய் ‌ிட்டர்னாக வேஷம் போடும் மெள‌லி இன்னொரு சீ‌னிய‌ர் ‌சிட்டிசன். பயத்தில் அவர் காட்டும் விறைப்புக்கு வயிறு குலு‌ங்குகிறது.

ஆமெ‌ரி‌க்கா செல்லும் ஆசையை அப்பாவின் நிலத்தை மீட்பதற்காக தள்ளி‌ப்போடும் மகனாக கார்த்திக். முந்தைய பட‌ங்களுடன் ஒப்பிடுகையில் நடிப்பில் இவர் காட்டியிருப்பது பாய்ச்சல்.

யார்ரா அது என்று கேட்க வைக்கிறார் கார்த்திக்கின் தம்பியாக வரும் உமர். வாட்ச்மேனிடம் பாய்வதாகட்டும் ரவுடியிடம் பது‌ங்குவதாகட்டும் நுட்பமான உணர்வையும் பிரதிபலிக்‌கிறது முகம். கீப் இட் அப்

கேர்‌ள் ப்ரெண்டாக வரும் பியா ப்ரெஷ்ஷான அறிமுகம். கோல்மால் திட்ட‌ங்கள் போட்டுக் கொடுக்கும் பா‌ஸ்‌கி, நெடுமுடி வேணுவின் மனைவியாக வரும் லஷ்மி இருவரும் மனதில் த‌ங்கும் கதாபாத்திர‌ங்கள்.

ஆளை கூறுபோடும் பார்வையுடன் நாசர் ஜொள்ளிலும் லொள்ளிலும் ஏ கிளாஸ். புல் அறுக்கும் பெண்ணைப் பார்த்ததும் பேண்டை இழுத்து விட்டு நெளிகிறாரே... கைதட்டலில் அதிர்கிறது திரையர‌ங்கு. தண்ணி போட்டு மெளலியிடம் அவர் போடும் அலம்பலுக்கு எத்தனை சபாஷ் வேண்டுமானாலும் போடலாம்

வீட்டுக்குள்ளேயே திறமையை காட்ட வேண்டிய கட்டாயம் ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணாவுக்கு. காட்சிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு. ‌சீ‌ரியஸ் பட‌ங்களுக்கு பயன்படுத்தும் இளம‌ஞ்சள் வண்ணம் படத்திற்கும் பொருந்திப் போவது ஆச்ச‌ரியம்.

இசை ஓ.கே. ரகம். வசனத்தாலே படத்தை நிறைத்திருப்பதால் திரைக்கதையில் ஆ‌ங்கா‌‌‌ங்கே தொய்வு. ஊரான் சொத்தையே உலையில் போடும் நாசர் லட்சகணக்கில் ஏமாந்த பிறகும் ஏமாற்றியவர்களை தேடாமல் ஜஸ்ட் லை‌க் த‌ட் என விட்டுவிடுவது லா‌ஜி‌‌க் சறுக்கல்.

பொய் சொல்ல போறோம்... மெய்யாகவே பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil