Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்யம் - விமர்சனம்!

Advertiesment
சத்யம் - விமர்சனம்!
, திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (17:23 IST)
முதலமைச்சர் கனவில் இருக்கும் மூன்று அமைச்சர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். அவர்களை கொலை செய்ய லோக்கல் ரவுடியை நியமிக்கும் இன்னொரு அமைச்சருக்கு (கோட்டா சீனிவாசராவ்) அதிர்ச்சி.

காரணம், அவர் நியமிக்கும் ரவுடி அமைச்சர்களைக் கொல்லவில்லை. கொலை செய்தது வேறு யாரோ. கொலைகாரனின் அடுத்த குறி நாமாக இருக்குமோ என கோட்டா சீனிவாசராவுக்கு பயம்.

இன்னொருபுறம் அமைச்சர்களின் கொலையால் சூடாகிறது காவல்துறை. கொலையாளியை கண்டுபிடிக்கும் பொறுப்பை அசிஸ்டெண்ட் கமிஷனர் விஷாலிடம் ஒப்படைக்கப்படுகிறது. புலன் விசாரணையில் குற்றவாளி யார் என தெரியவரும்போது அதிர்ச்சிக்குள்ளாகிறார் விஷால்.
webdunia photoWD

அவர் காக்கி சட்டை போட யார் காரணமோ, 'சட்டம் தண்டிக்கணும், சாமிதான் கண்ணை குத்தணும்'என்று யார் அவருக்கு சொல்லிக் கொடுத்தாரோ அதே போலீஸ் அதிகாரிதான் (உபேந்திரா) கொலைகாரன். அவர் ஏன் கொலைகாரன் ஆனார்? குரு சிஷ்ய மோதலில் ஜெயித்தது யார்?

படிக்கும்போது சுவாரஸ்யமாக தோன்றும் சில கதைகள் பார்க்கும்போது ரொம்ப சுமாராக தெரியும். சத்யம் அந்த வகை. நோஞ்சான் திரைக்கதையை விஷாலின் சிக்ஸ்அப் தேகத்தால் தூக்கி நிறுத்த பார்த்திருக்கிறார்கள். ஐயோ பாவம்!

உடுப்பு போட்டால் ஒட்டடை குச்சியாக தனது போலீஸ் வேடத்துக்கு மிடுக்கு சேர்க்கவே திணறியிருக்கிறார் விஷால். முதுகில் கத்திக் குத்து வாங்கிய பிறகு சின்ன சைஸ் ஊரையே சிதறிடிக்கிறார். விட்டால் உலகத்தையே உதைப்பாரோ என்று பயம் தோன்றுகிறது.

சொற்ப நேரமே வந்தாலும் சிற்பமாக செதுக்கியிருக்கிறார்கள் உபேந்திராவின் கேரக்டரை. நீதிமன்றத்தில் அவரது ஒவ்வொரு வார்த்தையும் வாள் வீச்சு. நயன்தாரா டி.வி. நிருபர். எஃப் சானலா என்று கேட்கத் தோன்றும் தாராளம். அவரிடம் உதை வாங்கும் ராம்ஜியின் காமெடி... எரிச்சலை கிளப்பும் நகைச்சுவை!

ஆக்சன் கதையில் அம்மா பிள்ளை சென்டிமெண்ட். சுதா சந்திரனும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

என் அன்பே, பால் பப்பாளி இரண்டு பாடல்கள் தேறும். மற்ற பாடல்கள் பின்னணி இசை எல்லாமே அழுகுணி. கோணங்களிலும், வண்ணங்களிலும் ரசிக்க வைக்கிறது ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு.

துப்பாக்கி முனையில் வில்லன்களை நிறுத்தி சொற்பொழிவு நடத்துகிறார் விஷால். அதுவும் கிளைமாக்ஸில்... ஐயோடா!

இயக்குனருக்கு சத்யம், நமக்குதான் சோதனை!

Share this Story:

Follow Webdunia tamil