Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேள்விக்குறி - ‌விம‌ர்சன‌ம்

Advertiesment
கேள்விக்குறி - ‌விம‌ர்சன‌ம்
, வெள்ளி, 30 நவம்பர் 2007 (11:04 IST)
webdunia photoWD
த‌மிழக‌த்‌தி‌ல் இ‌‌‌ன்று (வ‌ெ‌ள்‌ளி‌க்‌கிழமை) வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ள கே‌ள்‌வி‌க்கு‌றி பட‌ம் அ‌திரடியாக ஆர‌ம்‌பி‌‌த்து பல ஆ‌ச்ச‌ரிய‌க்கு‌றி ம‌ற்று‌ம் பல கே‌ள்‌வி‌க்கு‌றியுட‌ன் முடி‌கிறது.

ஜெய்லானி, சோனியா, ப்ரீத்தி வர்மா, கரிகாலன், சிஸல் மனோகர், முதல்வன் மகேந்திரன், விஜி நடிப்பில் கே.வி. மணியின் ஒளிப்பதிவில் சத்யபிரசாத் ஜியின் இசையில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜெய்லானி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஜெய்லானி கே. மணிகண்டன்.

போலீஸ் விசாரணையில் தன்னை துன்புறுத்தியும், தன் மனைவியை லாக்கப்‌பி‌ல் மரணமடையவும் வைத்த போலீஸைப் பழிவாங்க ப்ளாக்மெயில் செய்யும் ஒருவனின் கதை எப்படி முடிகிறது என்பதே '?' படம்.

ஜெய்லானி ஒரு போலீஸ் கமிஷ்னர் வீட்டுக்குள் நுழைகிறார். முகம், உடம்பெங்கும் காயங்கள். வீட்டில் கமிஷ்னர் மனைவியையும், மகளையும் கட்டிப்போட்டு அவர்கள் மூலமே கமிஷ்னரை வரவழைத்து அவரையும் அடித்து உதைத்து கட்டிப்போடுகிறார். பிறகு தன்னையும் தன் மனைவியையும் துன்புறுத்திய அனைத்து போலீஸ்காரர்களையும் கமிஷ்னர் வீட்டுக்கு வரவழைத்து கட்டிப்போட்டு உதைக்கிறார். தன்னை ஸ்டேஷனில் அடித்து லாடம் கட்டியதைப் போலவே அவர்களையும் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தாக்குகிறார்.

இவ்வளவுக்கும் வீட்டுக்கு வெளியே காவலுக்கு போலீஸ்காரர்கள், செக்யூரிட்டிகள் நிற்கும்போது நடக்கிறது. மிகவும் தாமதமாகவே கமிஷ்னர் ஒருவனால் ப்ளாக்மெயில் செய்யப்படுவது தெரிகிறது. ஆனால் அவனோ காணாமல் போன தன் மனைவி எங்கே என்று கேட்டே மிரட்டுகிறான், கையில் துப்பாக்கி வேறு. இந்த எவனோ ஒருவன் வேடத்தில் இயக்குநர் ஜெய்லானி.

காணாமல் போன மனைவி கொண்டுவரப்படுவது பிணமாகத்தான். போலீஸ் அதிரடி நடவடிக்கையில் இறங்க... எல்லா காவல் நிலையங்களுக்கும் வீடியோ கேமரா வைத்து அனைத்து‌ம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஜெய்லானி நிபந்தனை போட, கோரிக்கை நிறைவேறும் நேரத்தில் அதிரடிப்படை ஜெய்லானியைச் சுட்டுக் கொன்று எல்லோரையும் மீட்கிறது.

தலைப்பைப் போலவே கதையும் சிறுசுதான். பழைய பாலம் ரகக் கதை. ஆனாலும் கே.வி. மணியின் கேமராவும், சத்யபிரசாத் இசையும் நிமிர வைக்கின்றன.

படத்தில் தலைப்பின் பெயரில் எந்த வார்த்தையும் இல்லை. '?' மட்டும்தான் உள்ளது.

படம் பார்த்தவுடன் நமக்குள் சில ஆச்சரியக் குறிகளும், கேள்விக் குறிகளும் எழுந்ததைக் கூறவேண்டும்.

சில ஆச்சரியக் குறிகள்...!

படத்தின் ஆரம்பத்திலிருந்த வேகத்தை முடிந்தவரை கடைசி வரை பராமரித்திரு‌ப்பது,

ஒரு பங்களா, போலீஸ் ஸ்டேஷன் என இரண்டு இடங்களைக் கொண்டு தொய்வின்றி கதை சொல்லி இருப்பது.

வீட்டின் உள்ளேயே பெரும் பகுதி கதையை ஓடவிட்டு பரபரப்பை குறையாமல் வைத்திருப்பது,

அசரவைக்கும் பின்னணி இசை, அருமையான ஒளிப்பதிவு, ஒரே ஒரு பாடலை ஒரு முழுப்படத்துக்கு வைத்திருக்கும் துணிச்சல்.

சில கேள்விக்குறிகள்!

படம் ஆரம்பித்த பின் சில நிமிடங்களுக்கு கதை எது... அதன் போக்கு எது... பயணம் எது என தெரியாமல் குழப்பியிருப்பது.

கமிஷ்னர் வீட்டுக்குள் புகுந்து இவ்வளவு சாகசம் செய்யுமளவிற்கு பாலாவின் பலம் என்ன என்பது கூறாதது.

தொழில்நுட்பத் திறமைகள் வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில் இவ்வளவு போலீசையும் கிள்ளுக் கீரையாக பலவீனர்களாகக் காட்டியிருப்பது.

புலனாய்வு கொடிகட்டிப் பறக்கும் இக்காலத்தில் போலீஸ் துறையையே குறைத்து மதிப்பிட்டு காட்டியிருப்பது.

கேள்விக்குறிகளும், ஆச்சரியக் குறிகளும் சரியா என்கிற கேள்விக்கு ரசிகர்களின் தீர்ப்புதான் முற்றுப்புள்ளி வைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil