Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருத்தம் - விமர்சனம்

Advertiesment
திருத்தம் - விமர்சனம்

Webdunia

, செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (11:41 IST)
ஹரிகுமார், பிரியங்கா, மான்சி, சுஜா, நாசர், ஆதித்யா நடிப்பில் ஜீவன் ஒளிப்பதிவில் ப்ரவீன்காந்தி இசையில் பொன்ராமன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஃபோப்ரோ பிலிம்ஸ்.

முகம் அழகற்ற திக்குவாய்க்காரராக இருக்கும் ஹரிகுமாரை யாரும் திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை. ஏமாற்றம். இந்த ஏக்கத்தில் தாய் இறந்துவிடுகிறார். டிரைவர் வேலை பார்க்கும் ஹரி மீது அனுதாபம் காட்டுகிறார் முதலாளி மகள் பிரியங்கா. பரிவை காதலாக நினைக்கிறார் ஹரி. அந்த பலவீனத்தையறிந்த சுஜா, பிரியங்கா ஹரியை காதலிப்பதாக குரல் மாற்றிப் பேசி ஏமாற்றுகிறார்.

தெரிந்து, கோபமடைந்த ஹரி தன் விகாரமுகத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக் கொள்கிறார். திக்குவாயை தீவிர பயிற்சியால் சரி செய்து கொள்கிறார். தன்னை ஏமாற்றிய - அவமானப்படுத்திய பெண்ணினத்தையே பழிவாங்க வரிசையாகப் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்கிறார். கழற்றி விட்டு விடுவார்.

அப்படி போலீஸ் கமிஷனர் அக்கா மகள் மான்சியையும் ஏமாற்றி பிடிபடுகிறார். பிறகு ஒரு ப்ளாஷ்பேக். நல்லவர் எப்படி கெட்டவன் ஆனார் என்று. தற்கொலை முயற்சி தலையில் பலத்த அடி... தாங்க முடியாத தலைவலி வருவது... என்று இஷ்டத்துக்கு பூ சுற்றி கடைசியில் கருணைக்கொலை செய்து ஹரிகுமாரைக் கொன்று விடுகிறார்கள். நம்மையும் சேர்த்துதான்.

கதையில் எதைச் சொல்ல வருகிறார்கள். நாயகனின் காதலையா? சமூகம் எப்படி அவனை சைக்கோ ஆக்கியது என்பதையா? தலைவலி விஷயத்தை விரிவாகக்காட்டி அனுதாபம் பெறவா... புரியவில்லை. பிரதான பாதையை விட்டு கதை இஷ்டத்துக்கு திசை மாறிப் போய் எங்கோ போய் முட்டுச்சந்தில் முட்டி நிற்கிறது.

ஹரிகுமார் முடிந்தவரை முயற்சி செய்திருக்கிறார். தூத்துக்குடியில் பார்த்தவர் இளைத்திருக்கிறார். ரசிக்க முடியவில்லை. நாயகிகளில் ஒருவர் பிரியங்கா பரவாயில்லை. மான்சி... மிக சுமார்.

நான் அவனில்லை, மன்மதன் இரண்டு கதைகளையும் கலந்துகட்டி கலக்கி சூடாக்கி தந்திருக்கிறார்கள். சூடு மட்டும் போதுமா சுவையில்லையே.

Share this Story:

Follow Webdunia tamil