Entertainment Film Review 0705 24 1070524106_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நினைத்து நினைத்து பார்த்தேன்

Advertiesment
நினைத்து நினைத்து பார்த்தேன்

Webdunia

விக்ராந்த், ஆஷிதா, ரோஜா, ஒரு தலைராகம் சங்கர், கருணாஸ், ராஜ்கபூர் ஆகியோரின் நடிப்பில் மது அம்பாட் ஒளிப்பதிவில் ஜோஷ்வாஹதர் இசையில் மணிகண்டன் இயக்கியுள்ள படம்.

சங்கர், ரோஜா தம்பதியினரின் மகன் விக்ராந்த். பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் விக்ராந்த் காணாமல் போய்விடுகிறார். கண்டுபிடிக்க முடியவில்லை. ரோஜா தம்பதிகள் தேடாத இடமில்லை. இருந்தும் விக்ராந்த் கிடைக்கவில்லை. கடைசியில் "காதல்" பரத்தைப் போல "சேது" விக்ரம் போல தாடி மீசை அழுக்கடைந்த உடையுடன் பைத்தியம் போல ஆகிவிடுகிறார். அவரை நேரில் பார்த்தும் தாயான ரோஜாவுக்கு அடையாளம் தெரியவில்லை. மீண்டும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

காணாமல் போவற்கிடையிலிருந்து பைத்தியமாவது வரை என்ன நிகழ்கிறது என்பது தான் "நினைத்து நினைத்து பார்த்தேன்" படக்கதை.

பிலிம் இன°யூட்டிற்கு பாகிஸ்தானிலிருந்து வந்து சேருகிறார் ஆஷிதா. சேரும் போதே பலத்த எதிர்ப்பு. பாகிஸ்தான் பிரஜைக்கு இங்கு இடமா என்று போராட்டம் வெடிக்கிறது. ஆஷிதாவுக்கும் விக்ராந்துக்கும் நட்பு காதலாகிறது. பாகிஸ்தானிலிருந்து வரும் ஆஷிதாவின் அப்பாவும் ஆஷிதாவை எதிர்க்கும் உள்ளூர் மத வெறியர் ராஜ்கபூரும் சேர்ந்து கொண்டு விக்ராந்தை தாக்க.. அவர் உருக்குலைந்து மனநோயாளியாகிறார்.

படத்தில் எந்த ரூட்டில் கதையை நகர்த்துவது என்று இயக்குநர் திணறியிருக்கிறார். ஒரு தாயின் பாசத்தைச் சொல்லலாம் என்று ரோஜா மூலம் நினைக்க வைக்கிறார். எல்லை தாண்டிய நாட்டுப் பெண்ணின் காதலைச் சொல்லி சுவா°யப்படுத்தியிருக்கலாம். இந்தியப் பிரஜை அல்லாதவர் காதலிக்கப்படும் போது உள்ள சிக்கலைச் சொல்லியிருக்கலாம். காதல் தேசம், மதங்களைக் கடந்தது என்று கூறியிருக்கலாம். ஆச்சாரமான ம°லீம் குடும்பத்துப் பெண்ணை காதலித்து அவளின் பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்வதில் உள்ள பிரச்சினையை எடுத்துக் கொண்டிருக்கலாம். பாகிஸ்தானில் வேண்டுமானால் மதவெறி உண்டு. இந்தியனுக்கு எம்மதமும் சம்மதம் என்று கூறியிருக்கலாம் தெளிவாக. ஆனால் எதையும் அழுத்தமாகச் சொல்லாமல் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் நாயகன் விக்ராந்தக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. சாதாரண காட்சிகள் மிகச் சுமாரான நடிப்பு. பாகிஸ்தான் முஸ்லீம் பெண்ணாக வரும் ஆஷிதா தோற்றத்தால் கவர்கிறார். கொஞ்சிக் கொஞ்சித் தமிழ் பேசுகிறார். ஆனால் அதுவே படம் முழுக்கத் தொடர்வது சலிப்பூட்டுகிறது. அவர் பாகிஸ்தான் பெண் என்பதை அழுத்தமாகக் காட்டவில்லை. எனவே உள்ளூர் பெண் போலவே தெரிகிறார்.

படத்தில் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் என்கிற தளத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை. கருணாஸின் லூட்டிகள் எடுபடவில்லை. எரிச்சல் தான் வருகிறது.

மது அம்பாட்தான் கேமரா. அவரைப் பயன்படுத்திக கொள்ளும் அளவுக்குக் காட்சியமைப்புகள் இல்லை. இசை ஜோஷ்வா ஹதர். பாடல்களில் இனிமை சாரல் வீசுகிறது. கூடவே "காதல்" வாசமும் மணக்கிறது. வசனம் பாலகுமாரன். இந்த வசனங்களை எழுத பாலகுமாரன் தேவையில்லை. இறுதியில் நாயகன் பைத்தியம் போலாவதில் "சேது", "காதல்" சாயல் அப்படியே உள்ளது.

எதையோ சொல்ல வந்து நெஞ்சுக் குழிக்குள் புதைத்துக் கொண்டுள்ளார் இயக்குநர். சொல்ல முடியவில்லையா? சொல்லத் தெரியவில்லையா இயக்குநருக்கே வெளிச்சம்.

நாயகன் பைத்தியமாகிவிடுகிறான் நாயகி இறந்துவிடுகிறார். நாயகனின் பெற்றோர் பிரிவுத்துயரில் விழுகிறார்கள். மொத்தத்தில் இயக்குநர் யாரையும் வாழவிடவில்லை. ஏன் இந்த எதிர்மறை சிந்தனை?

Share this Story:

Follow Webdunia tamil