Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லீ - விமர்சனம்

Advertiesment
லீ - விமர்சனம்

Webdunia

நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் சத்யராஜ் தன் மகன் சிபியை நாயகனாக்கித் தயாரித்துள்ள படம் "லீ". நிலாதான் நாயகி. பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இசை டி. இமான். ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ். சண்டைப் பயிற்சி அனல் அரசு.

லீ என்கிற லீலாதரன் மற்றும் அவனது நண்பர்களுக்கு சிறு வயதிலிருந்தே கால்பந்தாட்டம் என்றால் ஆர்வம். ஆர்வத்தை ஈடுபாடாக்கி வெறியாக தீ மூட்டி வளர்க்கிறார் கோச். கால்பந்துப் போட்டிகளில் சர்வதேச அளவில் சென்று சாதிக்கத் துடிக்கிறார்கள். ஆனால் கல்லூரி நிலையிலேயே அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார் ரங்கபாஷ்யம்.

தன் மகனுக்காக திறமைசாலிளான லீ குழுவினரை தன் கல்லூரியை விட்டு விலக்குகிறார். பணபலமும் அரசியல் செல்வாக்கும் பெற்ற ரங்கபாஷ்யம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராகிறார். கல்லூரி முதல்வர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பொறுப்பு ஆகியவற்றில் இருந்து கொண்டு லீ குழுவினரை வளர விடாமல் வாய்ப்பு கொடுக்காமல் தடுக்கிறார். கோச் அரிய புத்திரனையும் தீர்த்துக் கட்டுகிறார்.

தங்கள் கனவுகளைக் கலைத்து எதிர்காலத்தைச் சூன்யமாக்கிய ஒருவர், மத்திய அமைச்சரான பின் குமுறுகிறது லீ குழு. அந்தக் கொடிய மிருகத்தைக் கொலை செய்ய புறப்படுகிறார்கள் லீ & நண்பர்கள். முடிவு என்ன என்பதே "லீ" படம்.

லீ என்று பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ புரூஸ்லீ ஜெட்லீயை நினைத்துக் கொண்டு ஒரே அடிதடி ஆக்ஷனே போதுமென்று நினைத்து விட்டார் இயக்குனர். படத்தின் பெரும்பான்மையான பகுதியை துரத்தல், அடிதடி காட்சிகள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

தம்மாத்துண்டு பழிவாங்கும் கதையை வைத்துக் கொண்டு முழுப் படத்தையும் முடித்துள்ள இயக்குனரின் துணிச்சலையும், சாமர்த்தியத்தையும் பாராட்டலாம். கதை இவ்வளவுதானா என்று கேள்வி எழாத அளவுக்கு பரபரப்பு, விறுவிறுப்பு குறையாமல் படத்தை உருவாக்கியிருக்கும் அவர் கொஞ்சம் திரைக்கதையில் நேர்த்தி செய்து, லாஜிக் விஷயங்களை சரி செய்திருந்தால் வெகுச்சிறப்பாக படம் அமைந்திருக்கும். அந்தப் ப்ளாஷ்பேக் நீளம் போர்.

லீலாதரனாக நடித்துள்ள சிபி அதிகம் பேசவில்லை. அதிகமாக ஓடுகிறார். துரத்துகிறார். அடிக்கிறார். கோச்சாக வரும் பிரகாஷ் ராஜ் சிறிது நேரமே வந்தாலும் நிற்கிறார். ஐயோ பாவம் நிலா. பைத்தியம் போல ஓடுகிறார். பாடல் காட்சியில் ஆடுகிறார். நிலாவுக்கு மூன்றாம் பிறையாகவே வேடம். சிபி தன் உயரத்துக்கு ஏற்றபடி உடல் எடையைக் காட்டிக் கொள்ள வேண்டும்.

படத்தில் குத்துப் பாடல்கள் உள்பட எல்லாப் பாடல்களும் கேட்கும்படி உள்ளன. இமானின் இசை வளர்வது தெரிகிறது. இமான் கமான்! இன்னும் மேலே வாருங்கள்.

முழுப் படத்தின் பிரதான பாத்திரம் போல வருவது ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் கேமரா. படத்தின் அனைத்து ரீல்களிலும் அவரது வியர்வையின் ஈரத்தை உணர முடிகிறது. குறிப்பாக சேஸிங் காட்சிகளில் அசுரத் தனமான உழைப்பு.

திறமைசாலிகள் புறக்கணிக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதை தலையில் அடித்துச் சொல்லியிருக்கும் இயக்குனர். அதையே நெஞ்சைத் தொட்டுச் சொல்லியிருந்தால் சிறப்பாக வந்திருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil