Entertainment Film Review 0705 22 1070522092_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நண்பனின் காதலி - விமர்சனம்

Advertiesment
நண்பனின் காதலி - விமர்சனம்

Webdunia

ஆதித்யா, ஷிவானி, குணால், வினுசக்ரவர்த்தி, நிரோஷா நடிப்பில் தேவா இசையில் கிச்சா இயக்கியுள்ள படம்.

ஜீவா என்கிற வாலிபன் தான் கதை நாயகன். வேலை தேடி கோவா வரும் ஜீவா, வேலை தேடும் முன் காதலிக்கப் பெண் தேடுகிறான். எதிர்வீட்டுப் பெண் சுஜாதாவைச் சந்திக்கிறான். நட்பைக் காதலாக்க முயல்கிறான். ஜீவாவின் ராசி அவன் சுஜாதாவைக் கவர செய்யும் திட்டங்கள் எல்லாம் தோல்வியடைகின்றன. அவனது ரூமுக்கு ஒருவன் புதிதாக வந்து சேர்கிறான். அவன் சூர்யா. சூர்யாவின் செயல்கள் நடை உடை பாவனைகள் சுஜாதாவுக்குப் பிடித்துப் போகவே, அவனைக் காதலிக்கிறாள். காத்திருந்தவன் காதலியை நேற்று வந்தவன் கொத்திக் கொண்டு போவதா என்று ஜீவா சூர்யா மீது ஆத்திரம் கொள்கிறான். ஒரு கட்டத்தில் சூர்யா தன் சிறுவயது நண்பன் என்று தெரிகிறது. இந்நிலையில்ல சூர்யாவுக்கு ஒரு நோய் இருப்பதும் உடனே ஆபரேஷன் செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லப்படுகிறது. சுஜாதாவை தான் காதலிக்கவில்லை என்றும் ஜீவாவை அவளுடன் சேர்த்து வைப்பதாகவும் கூறும் சூர்யா, அதைச் செயலிலும் காட்டுகிறான். தன் நண்பனின் காதலுக்காகத் தன்னைக் காதலிக்கு காதலியை மறுத்துவிட்டு நண்பனுக்குத் தாரை வார்க்கிறான் சூர்யா. இதுதான் "நண்பனின் காதலி" படக்கதை.

ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண்கள் போட்டி போடுவது முடிவில் யார் வெல்வது என்பது போன்று பல படங்கள் வந்திருக்கின்றன. "நண்பனின் காதலி" அப்படிப்பட்ட கதைதான். இருந்தாலும் இளமை, ஜாலி, காலாட்டா என்று முன்பாதி கலகலப்புடன் நகர்கிறது. முதல் பாதியில் ஜீவா, சுஜாதாவைக் கவர போடும் திட்டங்களும் ஒவ்வொன்றும் ஜீவாவுக்கு எதிராகவே திரும்பும் காட்சிகளும் கலகலப்புடன் பரிதாபப்படவும் வைப்பவை.

பின்பாதியில் சூர்யா சம்பந்தப்பட்ட கதை செல்வதால் படத்தில் சூடுபிடிக்கிறது. இருந்தாலும் ஜீவா. சூர்யா நட்பு பற்றி ஆழமாக சொல்லப்படவில்லை. சூர்யாவுக்கு என்ன நோய், நிஷா ஏன் அங்கு வருகிறார், அமெரிக்காவில் இருப்பது யார் என்ன பின்னணி என்பவை பற்றியெல்லாம் தெளிவில்லை.

பல காட்சிகளில் பல படங்களின் சாயல் இருப்பதை உணர முடிகிறது. தேவாவின் இசையும் யுகபாரதியின் வரிகளும் தேவலாம். இருந்தாலும் "எங்கேயும் எப்போதும்" பாடலை அப்படியே "அடித்து" இருப்பது "நினைத்தாலே இனிக்கும்" செயலா?

மொத்தத்தில் நாயகனின் நடிப்பு, நாயகியின் கவர்ச்சி இவற்றை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். கதையை நம்பவில்லை. இயக்குநரின் நம்பிக்கை அவநம்பிக்கையாகி இருக்கிறது.


Share this Story:

Follow Webdunia tamil