காதலன், காதலிக்கு நடுவில் ஏற்படும் ஈகோ பிரச்சனைதான் படத்தின் மையம். உடனே இதே பின்னணியில் அமைந்த படங்களை மனக்கண்ணில் ஓடவிடாதீர்கள். இது முற்றிலும் வேறு மாதிரி.ராஜேஷ் எம் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் ஜீவா, அனுயா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். சந்தானத்துக்கு படம் முழுவதும் வருவது போன்ற கதாபாத்திரம். படத்தில் சந்தானத்தின் பெயர் விவேக் என்பது கூடுதல் சுவாரஸியம்.
காதலி தனது காதலை பல்வேறு இடங்களிலில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், சிவா மனசுல சக்தி படத்தில் அனுயா தனது காதலை காதலன் ஜீவாவிடம் வெளிப்படுத்தும் இடம், அரசு அங்கீகாரம் பெற்ற டாஸ்மாக் பார். இந்திய சினிமா எதிலும் இதுவரை இடம்பெறாத காட்சி என்று இயக்குனர் கூறுவதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் அனைத்துப் பாடல்களையும் நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். இதில், எம்.ஜி.ஆரும் இல்லீங்க.. நம்பியாரும் இல்லீங்க.. என்ற பாடலுக்கு ஜீவாவும், சந்தானமும் பட்டையை கிளப்பியிருக்கின்றனர்.
படத்துக்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தயரிப்பு பா. சீனிவாசன். ஒரு அடங்காபிடாரியைத்தான் காதலிச்சேன் என்ற பாடலை மலேசியாவில் எடுத்துள்ளனர்.
படத்தில் ஒரு காடசியில் கீலாவும் நடித்துள்ளார்.