Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெண்ணிலா கபடி குழு

Advertiesment
வெண்ணிலா கபடி குழு
இமே‌ஜின் கி‌ரியேஷன்ஸ் தயா‌ரித்திருக்கும் படம், வெண்ணிலா கபடி குழு. சுசீந்திரன் படத்தை இயக்கியிருக்கிறார். விஷ்ணு, சரண்யா மோகன், கிஷோர் நடித்துள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான கபடிதான் படத்தின் கதைக்களம். கபடியில் பெ‌ரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களும், அவர்களை ஒன்றிணைத்து பயிற்சி கொடுக்கும் கோச்சும்தான் படத்தின் பிரதான கேரக்டர்கள்.
webdunia photoWD

இதுவரை தமிழ் சினிமாவில் கபடி விளையாட்டை முறையாக காட்சிப்படுத்தியது இல்லை. அந்தக் குறையை வெண்ணிலா கபடி குழு போக்கும். கபடிக்கு நடுவில் இனிமையான காதலும் உண்டு. சரண்யா மோகன் கிராமத்துப் பெண்ணாக வருகிறார். அவரை காதலிப்பவராக விஷ்ணு.

வி. செல்வகணேஷின் இசையில் பாடல்கள் ஹிட்டாகியிருப்பது படத்தின் வெற்றிக்கு உதவும். படத்தின் பேசப்படும் இன்னொரு விஷயமாக இருக்கப் போவது ஜே.லக்ஷ்மண் குமா‌ரின் ஒளிப்பதிவு. கலை இயக்கம் ‌ஜி.சி. ஆனந்தன்.

எம் மகன் படத்துக்கு வசனம் எழுதிய பாஸ்கர் சக்தி இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். பிரான்சிஸ் கிருபா முதன் முறையாக இந்தப் படத்துக்கு பாடல் எழுதியுள்ளார். இவரைத் தவிர நா. முத்துக்குமார், சினேகன், கார்த்திக் நேத்தா ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இமே‌ஜின் கி‌ரியேஷன்ஸ் சார்பில் கே. ஆனந்த் சக்ரவர்த்தி படத்தை தயா‌ரித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil