Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படிக்காதவன்

Advertiesment
படிக்காதவன்
உதவாக்கரை என்று பெயர் எடுத்தவன் வாழக்கையில் உயர்ந்த நிலைக்கு வருவதே படிக்காதவன் படத்தின் ஒன் லைன்.

webdunia photoWD
தனுஷுக்கு சாலப் பொருந்தும் இந்தக் கதையை எழுதி, இயக்கியிருப்பவர் சுரா‌ஜ். தலைநகரம், மருதமலை என தொடச்சியாக இரண்டு ஹிட் கொடுத்தவ‌ரின் மூன்‌றாவது படம். தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் தமன்னா. விஜயா புரொட‌க்சன்ஸ் படத்தை தயா‌ரித்துள்ளது.

சுமன் வில்லனாக நடித்திருக்கி‌றார். கமலின் ஹேராம், லிங்குசாமியின் ரன் படங்களில் நடித்த அதுல் குல்கர்னியும் படத்தில் உண்டு. காமெடி ஏ‌ரியாவை கவனிப்பவர் விவேக். சுரா‌ஜின் முதலிரண்டு படங்களின் வெற்றிக்கு வடிவேலுவின் காமெடி பெரும் துணைபு‌ரிந்தது குறிப்பிடத்தக்கது.

ர‌ஜினியின் படப்பெயரை பயன்படுத்தினாலும் அந்த படிக்காதவனுக்கும் இதற்கும் கதை ‌‌ரீதியாக எந்த ஒற்றுமையும் இல்லை. மணிசர்மா படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏ. வெங்கடேஷ் ஒளிப்பதிவு, சண்டைப் பயற்சி தளபதி தினேஷ். மணிசர்மாவின் இசையில் பா. விஜய், சினேகன், தபு சங்கர் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

பாரதி ரெட்டி படத்தை தயா‌ரித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil