ராஜ் டிவி நெட்வொர்க்கின் தயாரிப்பில் வெளிவரும் முதல் படம் காதல்னா சும்மா இல்ல. ஒற்றன் படத்தை இயக்கிய இளங்கண்ணன் படத்தை இயக்கியிருக்கிறார்.
எதிரெதிர் குணம் கொண்ட இரு இளைஞர்கள் சந்தித்தால் எற்படும் விளைவுகளே படத்தின் கதை. எதிரெதிர் குணம் கொண்டவர்களாக ரவி கிருஷ்ணாவும் தெலுங்கு நடிகர் சர்வானந்தும் நடித்துள்ளனர். ஹீரோயினாக நடித்திருப்பவர் கமாலினி முகர்ஜி.
தெலுங்கில் வெற்றிபெற்ற காம்யம் படத்தையே தமிழில் காதல்னா சும்மா இல்ல என்ற பெயரில் எடுத்துள்ளனர். நாசர், இளவரசு, தேஜாஸ்ரீ, கிரேஸி மோகன் ஆகியோரும் நடித்துள்ளனர். பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக பணியாற்றிய வின்சென்ட் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் ஹைலைட் சமாச்சாரங்களுள் ஒன்று ரவி கிருஷ்ணாவும், தேஜாஸ்ரீயும் இணைந்து ஆடும் திருவிழாப் பாடல். பிரசாத் ஸ்டுடியோவில் ஜி.கே. அமைத்த பிரமாண்ட செட்டில் இந்தப் பாடல் காட்சி எடுக்கப்பட்டது.
வித்யாசாகர், அனில், மணிசர்மா என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளது படத்தின் மற்றுமொரு விசேஷம்.
“என்னுடைய சினிமா கேரியரில் திருப்புமுனையாக இந்தப் படம் இருக்கும்” என்கிறார் படத்தின் நாயகன் ரவி கிருஷ்ணா.