ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் விஜய் நடித்திருக்கும் படம் வில்லு. போக்கிரி வெற்றியை தந்த விஜய், பிரபுதேவா கூட்டணியின் படம் என்பதால் விநியோகஸ்தர்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்பு.அழகிய தமிழ் மகனுக்குப் பிறகு விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் என்கின்றன தகவல்கள். படத்தின் கலர்ஃபுல் அட்ராக்சன் நயன்தாரா. விஜய்யுடன் வில்லுவில் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்.
வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பது படத்தின் பிளஸ் பாயிண்டுகளில் ஒன்று. காமெடிக்கு வடிவேலு. போக்கிரியைப் போலவே வடிவேலு, விஜய் காம்பினேஷன் சீன்களெல்லாம் சிரிப்பலையை கிளப்புமாம். விஜய்யுடன் முதல்முறையாக ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் குஷ்பு. மூமைத்கான் தனது சகோதரி சபியா கானுடன் ஆடியிருக்கும் மம்மி டாடி பாடல் இளசுகளை எழுந்து ஆடவைக்கும்.
தேவி ஸ்ரீபிரசாத் இசை. வடிவேலு, கோவை சரளாவை பாட வைத்திருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானது படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும். ரவிவர்மனின் ஒளிப்பதிவும், பெப்சி விஜயனின் சண்டைக் காட்சிகளும் வில்லுவின் விரும்பத்தகுந்த அம்சங்கள்.
வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் குறிப்பாக விஜய் போடும் படகுச் சண்டை பரபரப்பாக பேசப்படும். படத்தின் எடிட்டிங்கை கவனிப்பவர் கோலா பாஸ்கர்.
பிரபுதேவா இயக்கியிருக்கும் இந்தப் படம் இந்தி சோல்ட்ஜர் படத்தின் ரீமேக் என்பது முக்கியமானது.