Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தநா 07 அல 4777

Advertiesment
தநா 07 அல 4777
ஜீவி பிலிம்ஸ் சார்பில் மகாதேவன் கணேஷ், உஷவெங்கட்ரமணி தயா‌ரித்திருக்கும் படம். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற டாக்சி நெ. 9211 படத்தின் ‌‌ரீ-மேக்.

webdunia photoWD
இந்திப் படத்தை அப்படியே தமிழுக்கு கொண்டு வராமல் சில மாற்றங்கள் செய்துள்ளதாக கூறுகிறார், இயக்குனர் ஆ. இலட்சுமிகாந்தன். இந்தியில் ஜான் ஆபிரஹாமுக்கு ஜோடி கிடையாது. தமிழில் அவர் நடித்த வேடத்தில் வரும் அ‌ஜ்மலுக்கு மீனாட்சி ஜோடி. டூயட்டும் உண்டு.

பணக்காரராக அ‌ஜ்மலும், டாக்ஸி டிரைவராக பசுபதியும் நடிக்கின்றனர். இந்த நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பணக்காரர்களே காரணம் என நினைக்கும் கேரக்டரும், ஏழைகளை ஒழித்துக் கட்டினால்தான் நாடு உருப்படும் என நினைக்கும் கேரக்டரும் சந்தர்ப்பவசத்தால் சேர்ந்திருக்க நேர்கிறது. எதிரெதிர் துருவங்கள் ஒன்றிணையும் போது ஏற்படும் விளைவுகளே படத்தின் கதை.

பசுபதி, அ‌ஜ்மல், மீனாட்சியுடன் சிம்ரனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் இசைக்கு நா. முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். கதை ஆர்.பி. குருதேவ், ஒளிப்பதிவு ப்‌ரியன். கலை தோட்டா தரணி.

Share this Story:

Follow Webdunia tamil