மொழிக்குப் பிறகு வெளிவரும் ராதாமோகனின் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு. வழக்கமான சினிமா ஃபார்முலாவுக்குள் அடங்காமல் படத்தை எடுத்திருப்பது எதிர்பார்ப்பின் இன்னொரு காரணம்.
அப்பா, மகள் பாசத்தை சொல்லும் இந்தப் படத்தில் அப்பாவாக பிரகாஷ்ராஜும், மகளாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். எனது சினிமா கேரியரில் இந்தப் படம் முக்கியமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார், த்ரிஷா. த்ரிஷாவின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் வித்தியாசமான வேடம்.
பிரகாஷ்ராஜின் மனைவியாக ஐஸ்வர்யா நடித்துள்ளார். வில்லித்தனமான வேடங்களிலேயே பார்த்த ஐஸ்வர்யாவை வேறு விதமாக காட்டியிருக்கிறார் ராதாமோகன். படத்தின் பாடல் காட்சிகளை கேரளாவில் படமாக்கியுள்ளனர்.
ப்ரீத்தா ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை வித்யாசாகர். அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர், வைரமுத்து. பிருந்தா, போனி வர்மா நடனம் அமைத்துள்ளனர். சண்டைப் பயிற்சி ஆக்சன் பிரகாஷ்.
படத்தை பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரித்துள்ளது.