Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திண்டுக்கல் சாரதி - முன்னோட்டம்

Advertiesment
திண்டுக்கல் சாரதி - முன்னோட்டம்
மலையாள நடிகர் சீனிவாசனின் கதை, திரைக்கதை, வசனத்தில் வெளியான பல படங்கள் தமிழில் ‌‌ரீ-மேக் செய்யப்பட்டுள்ளன. அந்த வ‌ரிசையில் புதிதாக, திண்டுக்கல் சாரதி. இந்தப் படத்தின் ஒ‌ரி‌ஜினலான வடக்கு நோக்கி எந்திரம் படத்தை இயக்கியதும் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia photoWD

அழகில்லாத ஒருவன் தாழ்வு மனப்பான்மை காரணமாக தனது அழகான மனைவியை சந்தேகப்படுகிறான். இந்த சந்தேகம் குடும்பத்தை சிதைக்கிறது. அம்மா, தங்கை, தம்பி அவனைவிட்டு பி‌ரிந்து போகிறார்கள்.

மனைவியும் தனது தாய் வீட்டிற்கு செல்கிறாள். சந்தேகம் மனநல விடுதிவரை அவனை இழுத்து வருகிறது. தவறை உணரும் அவனை மனைவி ஏற்றுக் கொள்கிறாளா என்பது கதை.

சீனிவாசன் நடித்த சந்தேக கணவன் வேடத்தில் கருணாஸ் நடித்துள்ளார். கதாநாயகனாக இது அவருக்கு முதல் படம். அவரது மனைவியாக நம்நாடு கார்த்திகா. சிவசண்முகன் படத்தை இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் இல்லாத குத்துப் பாடல்களை படத்தில் திணித்திருக்கிறார்கள்.

்‌ரிம் டவர்ஸ் சார்பில் ஜே. மோகன்குமார், எஸ். பாஸ்கர் படத்தை தயா‌ரித்துள்ளனர். படத்தின் ஒட்டு மொத்த விநியோக உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. படத்துக்கு தினா இசையமைத்துள்ளார். எடிட்டிங் வி.டி. விஜயன். சண்டைப் பயிற்சி வெங்கல் ரவி.

இம்மாதம் படம் திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil