கிரி, ரெண்டு படங்களுக்குப் பிறகு குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் தயாரித்திருக்கும் படம் ஐந்தாம்படை. சுந்தர் சி முதல்முறை குஷ்புவின் தயாரிப்பில் நடித்திருக்கும் படம்.
அண்ணன், தமிபி ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, அதேபோல் நான்கு பேர் கொண்ட இன்னொரு குடும்பத்துடன் பகை. இந்த மோதல்தான் ஐந்தாம்படையின் களம். இரு குடும்பத்தின் பெண்களும் இந்தப் பகையை ஊதி ஊதி பெரிசாக்குகிறார்கள். அந்த குடும்ப குல விளக்குகளாக சிம்ரனும், தேவயானியும் நடித்துள்ளனர்.
படத்தில் திரையரங்கு உரிமையாளராக சுந்தர் சி. நடித்துள்ளார். அக்ரஹார பெண்ணாக வரும் அதிதி செளத்ரி நாயகி. மலையாள நடிகர் முகேஷ் படத்தில் வெயிட்டான ரோல் ஒன்றில் நடிக்கிறார்.
படத்தின் காமெடி ஏரியாவை கலகலப்பாக்குகிறவர், விவேக். டோண்ட் வொர்ரி பி ஹேப்பி என்பதை அவர் நெல்லை பாஷையில் சொல்லும் போதெல்லாம் தியேட்டர் அதிரும் என்கிறார்கள். படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சிம்ரன் பாங்காங்கில் பாடல் ஒன்றுக்கு ஆடியிருக்கிறார். ஆல்தோட்ட பூபதி போல் ஆட்டம் தூள் கிளப்பும் என்கிறார்கள்.
அதிதி செளத்ரியுடன் மட்டுமின்றி சிம்ரனுடன் ஷோக்கு சுந்தரி என்ற பாடலுக்கும், தேவயானியுடன் சின்ன கொழுந்தனாரே என்ற பாடலுக்கும் ஆடியுள்ளார் சுந்தர் சி. அத்துடன் முடியவில்லை. கவர்ச்சி நடிகை சுஜாவுடனும் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.
கங்கை அமரன் எழுதிய ஓரம்போ ருக்குமணி வண்டி வருது பாடலை ரீ-மிக்ஸ் செய்திருக்கிறார்கள்.