ஏவி.எம். தயாரித்திருக்கும் படம். விஐபி, சுந்தரபுருஷன் படங்களை இயக்கிய சபாபதி தட்சிணாமுர்த்தி படத்தை இயக்கியிருக்கிறார். அனிதா, ஆகாஷ், இளங்கோ, ஈஸ்வரி என்ற நான்கு இளசுகளின் காதல்தான் படத்தின் கதை.
தெலுங்கில் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சந்தமாமா படத்தின் ரீ-மேக்தான் அஆஇஈ. காதலிக்க நேரமில்லை சாயலில் படத்தை எடுத்திருப்பதாக கூறுகிறார், படத்தை இயக்கியிருக்கும் சபாபதி தட்சிணாமுர்த்தி.
விஜய் ஆண்டனி இசையில் மொத்தம் ஆறு பாடல்கள். நவ்தீப் - மோனிகா, அரவிந்த் - சரண்யா மோகன் காதலன் காதலியாக நடித்துள்ளனர்.
படம் ரொமாண்டிக் காமெடியாக இருக்கும் என்றார் சபாபதி. யாரடி நீ மோகினியில் நயன்தாராவின் தங்கையாக நடித்த சரண்யா மோகனின் திறமையை வெளிக்கொணரும் வகையில் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
பாடல் காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார்கள் என மோனிகா, சரண்யா மோகன் இருவரையும் புகழ்கிறார், சபாபதி.
படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.