கூல் புரொடக்சனின் காதல் தயாரிப்பு, மகேஷ் சரண்யா மற்றும் பலர். லிங்குசாமியின் முன்னாள் உதவியாளர் பி.வி. ரவி இயக்கம். கேட்ட கதைதான்... ஆனால், இதுவரை பார்க்காத ட்ரீட்மெண்ட். படம் பற்றி ரவி சொல்லும் ஒரு வரி விளக்கம் சவாரஸ்யம்.
காதலன் காதலியாக ஷக்தி, சந்தியா நடிக்கின்றனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு. எதிர்ப்பை மீறி காதலர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதுதானே கதை என்று கற்பனை குதிரையை தட்டிவிட்டவர்கள் ஏமாந்தார்கள்.
காதலன், காதலி இருவர் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பில்லை. பிறகு...? இந்த பிறகுதான் படத்தின் சுவாரஸ்யம்.
மகேஷ், சந்தியா இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம்.
படத்துகூகு மகேஷ், சந்தியா மற்றும் பலர் என்றே பெயர் வைத்திருந்தார் ரவி. படத்தில் சந்தியா நடிப்பதால், பெயர் சரண்யா என மாற்றப்பட்டது.
பஞ்சாமிர்தம் படத்தில் நாயகியாக நடிக்கும் சரண்யா மோகன் முக்கிய வேடம் ஒன்றில் தோன்றுகிறார்.
மற்றும் கீர்த்தி சாவ்லா, டேனியல் பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.
வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு செய்திருப்பவர் குணசேகரன்.