Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பந்தயம் - முன்னோட்டம்!

Advertiesment
பந்தயம் - முன்னோட்டம்!
எஸ்.ஏ. சந்திரசேகரன் அவ்வப்போது தனது இயக்குனர் பசிக்கு போஜன‌ம் போடுவதுண்டு. லேட்டஸ்ட், பந்தயம். ஆக்சன் கதைதான். அளவுக்கு மீறாத அமிர்தமாய் கவர்ச்சியும் உண்டு.

நிதின் சத்யா பந்தயத்தின் நாயகன். நாலு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவருக்கு சோலோ ஹீரோ ப்ரமோஷன். இன்னொரு ஹீரோ ரேஞ்சுக்கு பிரகாஷ்ராஜ். இவர்கள் இருவருக்கும் நடுவிலான சவால்தான் கதை.
webdunia photoWD

மஜாவில் ஒரு பாடலுக்கு ஆடிய சிந்து துலானி கதாநாயகியாக திரும்பி வந்திருக்கிறார்.

எண்பதுகளில் இளைஞர்களின் இதயத் துடிப்பாக இருந்த சிலோன் மனோகரின் சுராங்கனி பாடலை ரீ-மிக்ஸ் செய்துள்ளார் விஜய் ஆண்டனி.

மனோகரின் சின்ன மாமியே உன் செல்ல மகளெங்கேயும் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிலோன் மனோகரிடம் முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகரன்.

சுராங்கனி பாடலுக்கு அசோக்குமார் நடனம் அமைத்துள்ளார்.

மேக்னா நாயுடுவும், ஓ போடு பாடலுக்கு ஆடிய ராணியும் தலா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளனர்.

படத்தில் விஜயின் ரசிகராக வருகிறார் நிதின் சத்யா. பேரரசு இயக்கும் படத்தில் விஜய் நடிப்பது போன்றும், அந்த படப்பிடிப்பை நிதின் சத்யா வேடிக்கை பார்ப்பது போன்றும் ஒரு காட்சியை எடுத்துள்ளார் எஸ்.ஏ.சி.

Share this Story:

Follow Webdunia tamil