Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிக்கும் சீமானே - முன்னோட்டம்!

Advertiesment
ரசிக்கும் சீமானே - முன்னோட்டம்!
எட்டப்பன் என்ற பெயரில் தொடங்கப்பட்ட படமே ரசிக்கும் சீமானாக நாமகரணம் மாறியிருக்கிறது. ட்ரான்ஸ் இந்தியா பட நிறுவனம் சார்பில் தயாரிப்பது திருமலை என்பவர்.

அமுல் பேபியாக பார்த்த ஸ்ரீகாந்த் இதில் வேறு முகம் காட்டுகிறார். ஆண்ட்டி ஹீரோ. அடுத்தவர்களின் பலவீனங்களை பயன்படுத்தி பணம் பண்ணும் வியாபாரி. தமிழின் ஹீரோயிஸ உலகில் இதெல்லாம் எட்டாவது அதிசயம்.
webdunia photoWD

ஆர்.கே. வித்யாதரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என நான்கு ஏரியாக்களை கவனிக்கிறார். நவ்யா நாயர் நடிக்கும் ஒரே தமிழ்ப் படம் இதுதான்.

அரவிந்த் ஆகாஷ், போஸ் வெங்கட், சத்யன், மயில்சாமி, லக்சா, காதல் தண்டபாணி, சம்பத், பாபூஸ், வாசு விக்ரம், அனுமோகன், தாமு, பாண்டு, பாலு ஆனந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, சத்யஜித், கஜினி ராஜேஷ், நீலமா ராணி, கெளசல்யா, அருண்மணி... யப்பா, குட்டி கோடம்பாக்கமே நடிக்கிறது.

ஸ்ரீகாந்தின் கதாபாத்திர பெயர் நந்து. புத்திசாலியான ஏமாற்றுப் பேர்வழி.

ஸ்ரீகாந்த், நவ்யா நாயர் காதல் வித்தியாசமாக கையாளப்பட்டிருக்கிறது.

விஜய் ஆண்டனி படத்துக்கு இசை. ப்ரியன், அண்ணாமலை, ஆண்டாள் ப்ரியதர்ஷினி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

படத்தொகுப்பு சுரேஷ், எம். கோட்டி. ஒளிப்பதிவு எம்.வி. பன்னீர்செல்வம்.

ஓ... ரசிக்கும் சீமானே வா பாடலை இப்படத்திற்காக ரீ-மிக்ஸ் செய்துள்ளார் விஜய் ஆண்டனி.

Share this Story:

Follow Webdunia tamil