போலீஸ் கதையின் புதிய பரிமாணம், காக்க... காக்க. கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த படம். வாரணம் ஆயிரம் படம் மீது குவிந்திருக்கும் அதிகப்படியாகன எதிர்பார்ப்புக்கு இதுவே காரணம்.
கெளதம் இயக்கிய படங்களில் அதிக பொருட்செலவில் தயாரான படம் இதுவே. கதையும் விஸ்தாரமானது. டீன் ஏஜ் முதல் வயோதிகம் வரை பல்வேறு வயதுக்குரிய தோற்றத்தில் நடித்துள்ளார் சூர்யா. சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆஸ்கர் பிலிம்ஸ் முதல் காப்பி அடிப்படையில் படத்தை தயாரித்துள்ளது.
படத்தில் ஒளிப்பதிவுக்கு பெரும் பங்கு உண்டு. ஒளிப்பதிவு, ரத்னவேலு.
இசை கெளதமின் விருப்பத்திற்குரிய ஹாரிஸ் ஜெயராஜ். இவர்கள் இணைந்து பணிபுரியும் ஐந்தாவது படம் இது.
வயோதிக சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளாராம் சிம்ரன். இளமைப் பருவத்தை நினைவுகூரும் பாடலொன்றும் சிம்ரனுக்கு உண்டாம்.
பாடி பில்டராக சில காட்சிகளில் வருகிறார் சூர்யா. இதற்காக உடற்பயிற்சி செய்து சிக்ஸ அப்ஸில் உடலமைப்பை முறுக்கேற்றியுள்ளார்.
அமெரிக்காவின் ப்ரூக்ளின் பல்கலைக் கழகத்தில் சில காட்சிகளை சிறப்பு அனுமதி பெற்று எடுத்துள்ளனர்.
அப்பா மகன் உறவை மையமாகக் கொண்டது வாரணம் ஆயிரம் என கூறுகிறார் இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன்.