புதிய கீதை, கோடம்பாக்கம் படங்களை இயக்கிய ஜெகன்நாத்தின் மூன்றாவது படம். ஜெகன்நாத் சேரனின் அசிஸ்டெண்ட். அவரிடம் தொழில் பயின்றவர். ராமன் தேடிய சீதையில் குருவை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
சேரன், பசுபதி, நிதின் சத்யா என்று மூன்று ஹீரோக்கள். கதை நகர்வது சேரனை சுற்றி. தனக்கேற்ற மணப்பெண்ணை அவர் தேடுவதே கதையாம். பசுபதி கண் தெரியாதவராக வித்தியாசமான வேடமேற்றுள்ளார். நிதின் சத்யாவுக்கு பப்ளியான வேடம்.
படத்தில் மொத்தம் ஐந்து ஹீரோயின்கள். விமலாராமன், ரம்யா நம்பீஸன், கஜாலா, கார்த்திகா மற்றும் நவ்யா நாயர்.
மூன்று நாயகர்கள், ஐந்து நாயகிகள் மொத்தம் எட்டு பேர். இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் இதில் பிரதானமாக இடம்பெறுகிறது.
மோசர்பேர் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் குளோபல் ஸ்டுடியோவில் புரொடக்சன் இணைந்து தயாரிக்கிறது.
படத்தின் பிரதானமான இன்னொரு அம்சம் இசை. வித்யாசாகர் இசையமைத்துள்ளார். மெலடி பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நவ்யா நாயருக்கு இதில் கெளரவ வேடமாம். படம் தொடங்கி நீண்டநாள் கழித்தே படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் இவர்.
விமலாராமன் இடம்பெறும் பாடல் காட்சியொன்றை கேரளா அருவியொன்றில் படமாக்கியுள்ளனர்.