கதை பிடித்து சரத்குமார் தயாரித்து நடிக்கும் படம். சொந்தப் படம் என்பதால் செலவில் கை வைக்கவில்லை. சரத்தும், இயக்குனரும் சொல்வதை வைத்து பட்ஜெட் 15 கோடியை தாண்டும் என கணிக்கிறது இண்டஸ்ட்ரி. பெரும் பகுதி காட்சிகள் படமானது மலேசியாவில். அப்பா மீதான களங்கத்தை மகன் போக்குவதே கதை. நீங்கள் நினைப்பது சரி. சரத்குமாருக்கு அப்பா மகன் என்று இரண்டு வேடங்கள். மகன் சரத்துக்கு இரண்டு ஜோடிகள். நமிதா, பர்ஸானா.
சமீபத்தில் சரத்குமார் அதிக ரிஸ்க் எடுத்து நடித்த படம் என்று 1977-ஐ சொல்லலாம். குறிப்பாக சண்டைக் காட்சிகள். ஆக்சன் கதை என்பதால் இந்த ஈடுபாடு.
படத்தை இயக்கியிருக்கும் ஜி.என். தினேஷ்குமார் எம்.பி.ஏ. பட்டதாரி. நிறைய விளம்பரப் படங்கள் இயக்கி அனுபவம் உள்ளவர்.
மும்பையிலிருந்து சந்தியா ரெட்டி என்பவரை வரவழைத்திருக்கிறார்கள். சரத், சந்தியா ரெட்டி பாடல் காட்சி ஒன்றும் படத்தில் உள்ளது.
200 அடி உயர கட்டிடத்தின் மேலிருந்து சரத்தும், நமிதாவும் குதிப்பதாக ஒரு காட்சி. அபாயகரமான இந்தக் காட்சியில் தகுந்த பாதுகாப்புடன் இருவரும் டூப் போடாமல் குதித்து யூனிட்டை ஆச்சரியப் படுத்தியிருக்கிறார்கள்.
சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் சண்டைப் பயிற்சி நிபுணர் வில்லியம் ஓங் அமைத்துள்ளார்.
சரத், நமிதா பாடல் காட்சியொன்றை ஏவி.எம். ஸ்டுடியோவில் நாற்பது லட்சம் செலவில் அரங்கு அமைத்து எடுத்துள்ளனர்.
வித்யாசாகர் இசையமைத்துள்ளார். தயாரிப்பு சரத்தின் RSK பிக்சர்ஸ்.