கொக்கி, லீ படங்களின் இயக்குனர் பிரபுசாலமனின் மூன்றாவது படம், லாடம்! காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜே.பி. குமார், டி.ஒய். செளத்ரி தயாரித்துள்ளனர்.
வாயிலிருந்து வந்த சொல்லை கட்டுப்படுத்தவும் முடியாது, அது உருவாக்கும் விளைவுகளை தடுக்கவும் இயலாது. இது லாடத்தின் ஒருவரி கதை. சாஃப்ட்வேர் என்ஜினியரான நாயகன் சொல்லும் ஒரு சொல் எப்படி அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம் என்றார் பிரபு சாலமன்.
சாஃப்ட்வேர் இன்ஜினியர் குஞ்சுபாதம் கேரக்டரில் நடிப்பது புதுமுகம் அரவிந்தன். அவருக்கு ஜோடி சார்மி. ஏஞ்சல் என்ற சேல்ஸ் கேர்ளாக நடிக்கிறார்.
படத்தில் நாயகன், நாயகி இருவருமே அனாதைகளாக காட்டப்பட்டுள்ளனர்.
பாவாடை என்ற வில்லனாக நடித்துள்ளார் கோட்டா சீனிவாசராவ்.
பதினாறு நாட்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே லாடம்.
இதனால் தெலுங்கு படத்துக்கு 16 டேய்ஸ் என பெயர் வைத்துள்ளனர்.
ஜெயப்பிரகாஷ், தீரஜ், மனோரமா, சிட்டிபாபு, நெல்லை சிவா ஆகியோரும் படத்தில் உண்டு.