இயக்குனர் பிரியதர்ஷன் யு டி.வி.யுடன் இணைந்து தனது ஃபோர் ஃப்ரேம் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம், பொய் சொல்ல போறோம். இவர் தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.
இயக்குனர் விஜய் சொன்ன கதை சுவாரஸ்யமாக இருந்ததால், தயாரிப்பில் இறங்கியதாகக் கூறுகிறார் பிரியதர்ஷன். விஜயின் முதல் படம், கிரீடம். இவர் பிரியதர்ஷனின் உதவியாளர் என்பது கூடுதல் செய்தி.
பதினான்கு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ரே... ரே... தான் கதை. கதாபாத்திரங்கள் சீரியஸாக இருப்பார்கள். பார்க்கிற நமக்கு அது நகைக்சுவையாக தெரியும் என படம் குறித்து கூறினார் விஜய்.
படம் குறித்து மேலும் சில தகவல்கள்...
வானம் வசப்படும் கார்த்திக், ப்ரீத்தி படத்தின் நாயகன் நாயகி.
நாசர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நெடுமுடி வேணு தமிழில் நடித்திருக்கும் படம் இது.
மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி. ஸ்ரீகுமார் இசையமைத்துள்ளார்.
பாடல்கள் எழுதியிருப்பது நா. முத்துக்குமார்.
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு.
நாற்பதே நாளில் முழுப் படத்தையும் எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் விஜய்.