கதபறயும் போள் படத்தின் ரீ-மேக். அதில் மம்முட்டி நடித்த காட்சிகள் படத்தில் எட்டு சீன்களே வரும். தமிழில் நடிப்பது ரஜினி என்பதால், மூன்றாவது சீனிலிருந்து கடைசி காட்சி வரை வரும்படி கதையை மாற்றி எழுதியுள்ளார் பி. வாசு. கிராமத்து ஏழை பார்பர் பாலனாக பசுபதி. அவரது மனைவி ஸ்ரீதேவியாக மீனா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். வறுமையான சூழலில், சூப்பர் ஸ்டார் அசோக்ராஜ் (ரஜினி) பாலனின் பால்ய நண்பன் என தெரிய வருகிறது.
நண்பனிடம் உதவி கேட்கச் சொல்லி பாலனை சுற்றமும் நட்பும் வற்புறுத்துகிறது. பாலனின் தன்மானம் அதனை தடுக்கிறது. பாலன், அசோக்ராஜ் சந்திப்பு நிகழ்ந்ததா? பாலனின் வறுமை நீங்கியதா என்பது நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்.
படம் குறித்து மேலும்...
கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
நயன்தாரா ரஜினி ஜோடியாக நடித்துள்ளார். காமெடிக்கு வடிவேலு.
ரஜினி இதில் பதினான்கு கெட்டப்புகளில் வருகிறார். ஜேம்ஸ்பாண்ட் கெட்டப் அதிலொன்று.
சினேகா, குஷ்பு போன்ற முன்னணி நடிகைகள் இடம்பெறும் பாடல் காட்சியும் படத்தில் உண்டு.
இசை ஜி.வி. பிரகாஷ். மொத்தம் ஐந்து பாடல்கள். இதில் மூன்றில் ரஜினி நடித்துள்ளார். நயன்தாரா, ரஜினி இடம்பெறும் பாடல் காட்சியை எகிப்து பிரமிடு போன்ற செயற்கை அரங்கில் பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.
சினிமா குறித்து வாலி எழுதிய பாடலில் ரஜினி ரசிகர்களையும் நடிக்க வைத்துள்ளார் பி. வாசு.
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.