வட சென்னையை பின்புலமாகக் கொண்டு தயாராகும் மற்றுமொரு படம் வால்மீகி. வழக்கமான கத்தி கபடா சமாச்சாரம்தானே என்றால் தலையாட்டி மறுக்கிறார் இயக்குநர் ஜி.ஆனந்த நாராயணன். ஷங்கரின் அசிஸ்டெண்ட்.
அடாவடியாக திரியும் ஒரு இளைஞன் அன்பான ஒரு பெண்ணால் திருந்துவதே கதை. அடாவடி என்றால் சினிமா அடாவடி அல்ல. சாதாரணமான ஒருவனின் அடாவடி.
பாண்டி என்னும் அடாவடி இளைஞன் வேடத்தில் கல்லூரி அகில். அன்பான பெண்ணாக மீராநந்தன். பூக்காரி வேடத்தில் ஸ்ருதி நாயர். இவர்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
படம் குறித்து மேலும் சில தகவல்கள்...
படத்துக்கு இசை இளையராஜா. மொத்தப் படத்தையும் முடித்துவிட்டு இளையராஜாவுக்குப் போட்டுக்காண்பித்து, அவர் எந்தெந்த இடங்களைச் சொல்கிறாரோ அந்தந்த இடங்களில் பாடல்களை வைக்கப் போகிறாராம் இயக்குநர்.
விகடன் டக்கீஸ் பா.சீனிவாசனின் இரண்டாவது தயாரிப்பு.
வாலி பாடல்களை எழுதுகிறார்.
என்.அழகப்பன் ஒளிப்பதிவு.
மீராநந்தன், ஸ்ருதிநாயர் இருவருக்கும் இதுதான் முதல் தமிழ்ப்படம்.